முன்னுரை 7 ளார். இற்றைக்கு நான்கு நூற்றாண்டுகட்கு முற்பட்டவரும் வேத வழக்கை நன்கறிந்தவருமான நச்சினார்க்கினியர் இங்ங்னம் கூறக் காரணம் யாதாக இருக்கும்? இவர் வேத வழக்கை நன்கறிந்தவர் என்பதை அகத்திணை இயல் 5 ஆம் சூத்திரமாய 'மாயோன் மேய' என்ற நூற்பாவிற்கு உரையிட்டு வருங்கால் பிறர் உரையை, ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற்றோன்றிய மழையினையும், காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுபவாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவி கொடுக்குங்கால் அங்கி, ஆதித்தன்கட் கொடுக்கும் என்பது வேத முடிபாகலின் ஆதித்தன் அவ்வெல்லா நிலத்திற்கும் பொதுவென மறுக்க' என்ற முறையில் மறுப்பது வேத வழக்கில் இவர் வல்லவர் என்பதை வலியுறுத்தும். அத்தகைய நச்சினார்க்கினியர் இன்று நால் வேதம் என வழங்கப்பெறும் பெயர்களில் மூன்றை விட்டு விட்டு வேறு பெயர்கள் தரக் காரணம் என்னவென்றும் புரிய வில்லை. இவர் கூறும் பெயர்களுள் சாம வேதம் ஒழிந்த ஏனைய மூன்று பெயர்களும் (தைத்ரீயம், பெளடியம், தலவகாரம்), இன்று உள்ள வேதங்களின் பல சாகைகளின் பெயர்களேயாகும். உள்ளே உள்ள சாகைகளின் பெயர்களைக் கொண்டு வேதங்கட்குப் பெயரிடுதல் புதுமையாகும். தொல்காப்பியர் வேதவியாசருக் கும் முற்பட்டவர் என்று நச்சினார்க்கினியர் கருதுவதால் வேத வியாசர் தொகுத்த மறையின் பெயர்கள், அவருக்கு முற்பட்டவர் காலத்தே வழக்கில் இருந்திரா எனக் கொண்டு நச்சினார்க்கினியர் இவ்வாறு கூறியிருக்க வேண்டும். வேத அடிப்படையில் பழந்தமிழ் மன்னர்கள் சிலர் வேள்வி களும். செய்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. "யூபம் நட்ட வியன்களம் பல கொல் ' கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து ' என்ற குறிப்புகளேயன்றிப் புறம் 166ஆம் பாடல் மிக விரிவாக வேள்வி செய்தலைப்பற்றிக் கூறிச்செல்கிறது. இப் பாடலில் பல புதிய செய்திகளை அறிய முடிகின்றது. வேதங்கள் சிவபெருமா ணுடைய வாயை விட்டு நீங்காதவை என்பதும்,சிவபெருமான் மிக நீண்ட சடாபாரத்தை உடையவன் என்பதும், முது முதல்வன் என்று பேசப்பட்டான் என்பதும், வேதம் ஆறு அங்கங்களை உடையது என்பதும், வேதங்களை மறுத்து அவை பொய் என்று கூறியவர்களும் இருந்தனர் என்பதும், அவர்கள் மறுப்புரைகளைத் தோற்கடிக்கவேண்டி இருபத்தொரு வேள்வித்துறைகள் அனைத் தையும் செய்து முடித்தனர் கவுண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த 3
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை