புரட்சியின் இரண்டாவது வழி 32 இவ்விரட்டைகள் ஒன்றின் இறுதியில் மற்றொன்று தொடர்தல் உறுதி. எனவேதான் இவ்விரட்டைகளுள் அகப்படாத இன்பத்தை ஆனந்தம் என்று குறிப்பிட்டனர் நம் முன்னோர்கள். இந்த ஆனந்தம் இறுதியில் துன்பம் தராத ஒன்றாகும். சுகம்-துக்கம்; இன்பம்-துன்பம்; நன்மைதீமை என்பவை இரட்டைகள் என்ப்பெறும். ஆனால் இதனை எவ்வாறு ஒருவர் பெற முடியும்? 'அம்பலவர் தேனுந்து மலர்ப் பாதத்து அமுதுண்டவர்கள் மட்டுமே இந்த ஆனந்தத்தைப் பெறமுடியும். எனவே இறைவன் திருவடியைப் பற்றினவர்கட்கு மட்டுமே ஆனந்தம் கிட்டும் என்பதும் பெற்றாம். இந்த முறையில் ஆனந்தம் அடைந்தவர்கட்குத் தெளிவு என்பது தானே கிட்டிவிடும். ஆனந்த வெள்ளத்தில் அழுந்தித் தெளிவும் பெற்று விட்டவர்கட்கு ஊனம் என்பது எங்கிருந்து வரமுடியும்? எனவேதான் ஊனம் இல்லாதிருந்தார் என்று பேசுகிறார் கவிஞர். இந்த நிலை அடைந்து விட்டவர்கள், சுகதுக்கம் என்பவற்றைக் கடந்து சமதிருஷ்டி என்பதைப் பெற்று விடுதலின் அவர்கள் 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை'; அவர்கள் 'அஞ்ச வருவதும் ஒன்றில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் சுண்ணாம்புக் காள்வாயுங்கூட மூசுவண்டறை பொய்கை போன்ற தாகும். இந்த அடிப்படையை விளங்கிக் கொண்டால் ஒழிய வாகீசரின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடியாது. இந்நிலை அடைந்துவிட்ட வாகீசருக்குப் பகை என்று ஒருவரும் இல்லை. நட்பு என்று ஒருவரும் இல்லை. எனவே அடுத்துச் சமணர்கள் தந்த நஞ்சை உண்டபொழுதும் தம்மை மிதிக்கவரும் யானையின் கால்களைப் பார்க்கும் பொழுதும் கல்லுடன் கட்டிக் கடலுள் எறியப்பட்டபொழுதும் அமைதி குலை யாமல் இருக்க முடிந்தது. இத்தகைய ஒரு நிலையை அடைந்து விட்டவரைக் கண்டால் எளிதில் அடையாளங் கண்டுகொள்ள முடியும் என்கிறார் சேக்கிழார். கடலிலிருந்து கரையேறி அப் பெருமான் திருப்பாதிரிப்புலியூரில், தெருவில் நடந்து வரும் காட்சியைச் சேக்கிழார் நம் கண்முன் கொண்டு வரும் பாடல்கள்: "தூய வெண்ணிறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைத் துருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச்செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் விதியுள்ளே! "
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/351
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை