品名4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே' என்ற பாடல் அடிகளாரின் மனநிலையை விளக்க ஒப்பற்ற உதவி செய்கிறது. மாபெரும் கொடுமை செய்தவர்களைப் பற்றி ஒன்றும் கடுமையாகக் கூறாமல் வழக்கிலா அமணர் என்று ம்ட்டுமே கூறுகிறார். 'வழக்கிலா என்ற சொல்லுக்கு 'நல்வழக்கம் இல்லாத தீய வழக்கமுடைய என்று உரையாசிரியர் கூறும் பொருள் சொற்பொருளாக அமைந்திருந்தாலும் வேறு பொருள் காண்பது காப்பியப் புலவரின் கருத்துக்கு அரண் செய்யும் என்று நினைக்கத் தோன்றுகிறது. வழக்கு என்பது மரபு என்னும் பொருளுடைய சொல்லாகும். பால் சோறு என்றால் பாலும் சோறும் தருவதுதான் தமிழ்நாட்டு மரபு. மரபு அறியாதவர்கள் என்று கூறுவதால் இந்த உலக வழக்கங் கூட அறியாதவர்கள் என்று பொருள்பட்டு அவர்கள் அறியாமைக்கு அவர் இரக்கங்காட்டுவதை அறிவிக்கிறது. சமதிருஷ்டி உடைய அப்பெருமகனார் யாருக்கோ நடைபெற்ற வரலாற்றை எவ்வித உணர்ச்சி ஊடாடலும் இல்லாமல் கூறுபவர் போல, தமக்கு ஏற்பட்ட இவ்வனுபவத்தைக் கூறுவது அவருடைய அமைதியான வீரத்துக்கு ஒர் எடுத்துக் காட்டாகும். அடுத்து அதே போல மற்றொரு நிகழ்ச்சி பற்றியும் திரு நீலக்குடித் தேவாரத்தில், 'கல்லி னோடெண்ணப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக தூக்களின் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேனன்றேட் என்று பேசுவது வியப்பை விளைக்கின்றது. இதிலும் வறண்ட வரலாற்றைப் பேசும் வரலாற்றாசிரியர் போன்று எவ்வித உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமல் பேசும் ஆற்றல் படைத்த மாவீரர் ஆவார் வாகீசர். இப்பெருமகனார் பல தலங்களுக்குஞ் சென்று வழிபட்டுச் செல்கையில் திருவாவடுதுறையில் வணங்கி மேற் செல்கையில் 'பழையாறை வட தளி' என்ற திருக்கோயில் இருந்தமை நினைவுக்கு வருகிறது. ஆனால் இவர் செல்கின்ற காலத்தில் சமணர் தம் செல்வாக்குக் காரணமாக அக் கோயிலை மண்ணால் மூடி விட்டனர். தமிழகத்தில் எத்தனையோ கோயில் கள் உள்ளன. என்றாலும் சமணர் வஞ்சனையால் மூடிய இக்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/354
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை