328 - பெரியபுராணம் - ஓர் ஆய்வு திருநீலகண்டர், மூர்த்தியார், காரைக்காலம்மை போன்றவர்கள் இம்மெல்வினைக்கு எடுத்துக் காட்டு ஆவர் திருநீலகண்டரும் தம் பொறி புலன்களை அறவே அடக்கி மாதவஞ் செய்த முனிவர்களைவிட மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார். முனிவர்கள் பொறி புலன்கட்கு இரை கிடைக்காத காட்டில் புலனடக்கம் செய்து வாழ்ந்தனர். ஆனால்திருநீல கண்டர் வீட்டில் இருந்த படியே அழகிய மனைவி பக்கத்தில் இருக்கும் பொழுதே புலனடக்கத்தின் தலைநின்றார். இது எவ்வாறு இயன்றது? தம்முடைய ஆற்றல் ஒன்றைமட்டும் நம்பி இவர்கள் புலனடக்கத்தில் ஈடுபட்டிருப்பின் முழு வெற்றி கிட்டி இருக்குமா என்பது ஐயத்திற்கிடமாகும். இறைவனுடைய திருநீல கண்டத்தில் இப்பெரியாருக்கு எல்லையில்லா ஈடுபாடு இருந்தது. எனவே மனைவியார் மானம் காரணமாகத் தோன்றிய ஊடலால் 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்' என்று ஆணையிட்டு விட்டார். தம்மைத் தீண்டக் கூடாது என்பது தான் அந்த அம்மையாரின் எண்ணமாக இருந்திருத்தல் வேண்டும். எனவே ‘என்னைத் தீண்டுவீராகில்' என்று தான் கூறியிருக்க வேண்டும். ஆனால் இறைவன் திருக்குறிப்பு அவருடைய நாவில் புகுந்து 'என்னை' என்று கூறுவதற்குப் பதிலாக எம்மை என்று கூறுமாறு செய்தது. இதன் பயன் எதிர்பாராத ஒன்றாக விளைந்தது. 'ஆதியார் நீல கண்டத்து அளவுதாங் கொண்ட ஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை மாதரார் தமையும் என்றன் மனத்தினும் தீண்டேன் என்றார். ' என்று வரலாறு கூறுவதால் அமைதியான முறையில் அயலவர் அறியாமல் மெல்வினை செய்வதன் மூலம் ஒரு மாபெரும் வீரர் உருவாகி விட்டார். 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' ' என்று எதனைத் தாயுமானவப் பெருந்த்கை அரிது என்று கூறினாரோ, அதனை எளிதில் செய்யும் வீரராகத் திருநீலகண்டர் உருவாகி விட்டார். இறுதியில் இறைவனே இவர் களைப் பார்த்து வென்ற ஐம்புலனால் மிக்கீர்!’ ’ என்று கூறும் அளவிற்கு உயர்ந்து விட்டனர். மூர்த்தி நாயனார், இறைவனுக்குத் தம் கையாலேயே சந்தனம் அரைத்துச் சாத்தும் பணியை மேற்கொண்டிருந்தார். சமணர்கள் இவருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காமல் செய்து விட்டனர். சந்தனம் சாத்தாமல் மற்றவை அனைத்தும் செய்தால்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/358
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை