3.30 பெரியபுராணம் - ஒர் ஆய்வு 'ஈங்கிவன் குறித்த கொள்கை இது; 'இனி இவனுக்காகத் தாங்கிய வனப்புநின்ற தசைப் பொதி கழித்திங்குன்பால் ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்றார். ' பெண்ணாகவும், தொண்டராகவும், அழகில் மிக்கவராகவும் உள்ள அப் பெரியார் தம் தொண்டு நடைபெற வேண்டும் என்றால் இந்த அழகிய உடம்பு தடை எனநினைந்தமையின் அதனை ஒழித்து விட்டார். இதுவும் அமைதியான முறையில் செய்யப்பெற்ற மெல்வினையாகும். கணவன் தன்னுடன் இருக்கின்றவரை அவனுடைய விருப்பத் துக்கு ஏற்பத் தம் விருப்பத்தை அடக்கிக் கொண்டு இந்த உடம்பு அவனுக்குரியது என்ற கருத்தில் இருந்தார். அவன்வேண்டா வென்று ஒதுக்கிய பிறகு தம் விருப்பப்படி நடக்கப் புறப்பட்டு விட்டார். குங்குலியக் கலயர் என்ற அடியார் இறைவனுக்குக் குங்குலிய தூபம் போடும் பணி செய்து வாழ்ந்தார். வறுமை மிகுந்த நிலையிலும் மனைவியின் மங்கல நாணை விற்றுக் குங்குலியம் வாங்கித் திருக்கோயிலில் தூபம் இட்டவர். இவருடைய காலத்தில் திருப்பனந்தாளில் உள்ள இலிங்கத் திருமேனி சாய்ந்து நின்றது. அதனை நேர் நிறுத்தி வழிபட வேண்டி அப்பக்கத்து மன்னன் தன் படைபலம் முழுவதையும் பயன்படுத்தி இருந்தும் அத் திருமேனி நேர் நிற்கவில்லை. இதனைக் கேள்வியுற்ற குங்குலியக் கலயர் என்ற தொண்டர் என்ன நினைந்தார் என்று சேக்கிழார் கூறுகிறார்; "சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த் தெழாமை நோக்கி யானும் இவ் விளைப்புற் றெய்க்கும் இது பெற வேண்டும் ' என்று பெரிய புராணம் கூறுவதிலிருந்து இத் தொண்டர்களின் செயல்களைப் புதிய கோணத்தில் காண முடிகிறது. சேனைகள் அனைத்தும் முயன்றும் செய்ய முடியாத ஒரு செயலை ஒரு தனி மனிதர்செய்யப் போகிறேன் என்று நினைப்பதும் வியப்பல்லவா? இத்துணைப் பேரும் செய்யமுடியாத ஒன்றைத் தான் செய்யப் போகிறேன் என்று ஒருவர் பேசினாலும், செய்ய முற்பட்டாலும் அஃது ஆணவத்தின் அல்லது அறியாமையின் வெளிப்பாடாகும் என்று தானே பொருள்படும். அப்படி இருக்க கலயர் ஏன் இவ்வாறு முடிபு செய்தார்? கவிஞரே இதற்கு விடை கூறுகிறார். நூற்றுக்கணக்கான மக்களும் படைஞரும் ஒரு ப்ொதுத்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/360
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை