பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சியின் இரண்டாவது வழி 3.3 I தொண்டில் முழுமூச்சாக இறங்கி, முயன்று அது முடியாமல் போனாலும் தங்கள் முயற்சியில் மயக்கம் உற்றுக் கிடக்கின்ற நிலையை மற்றொரு தொண்டர் காண்கிறார். இத்தனை மக்களும் ஏன் மயக்கமுற்றுக் கிடக்கின்றனர்? தாம் செய்ய முயன்ற தொண்டின் பயனாகத் தானே அவசமுற்றனர். எனவே கலயரும் அது போல இம்முயற்சியில் ஈடுபட்டுத் தாமும் மயக்கமுற வேண்டும் என்று நினைத்தே அச் செயலில் ஈடுபட்டார். பிறிதின் நோய் தந்நோய் போல் போற்ற விரும்பியதன் பயனே இவர் முயற்சி. இத் தொண்டர்கள் அமைதியான முறையில் மாபெருஞ் செயல்களைச் செய்வதற்கு இதுவும் ஒர் உதாரணமாகும். இவர்கள் செயலை உலகியல் பகுத்தறிவு கொண்டு ஆய்வது சரியன்று பெருஞ் செல்வத்துடன் வாழ்ந்த கணம்புல்லர் என்பார் திருக்கோயில் விளக்கெரிப்பதைப் பெருந் தொண்டாகச் செய்து வந்தார். செல்வம் மறையவும் புல்வெட்டி விற்று வந்த பொருளால் வயிற்றை நிரப்பாமல், கோயிலில் விளக்கெரிக்கப் பயன்படுத்தினார். புல் தீர்ந்தது. உடனே தம் முடியை விளக்கெரிக்கப் பயன்படுத்தினார். அமைதியே வடிவான இத் தொண்டர்கள் தம் குறிக்கோள் தட்டுப்படாமல் நடக்க எதுவுஞ் செய்யத் துணிவர் என்பது கருதற்குரியது. அன்றியும் திருக்கோயிலில் நம்முடைய முடி கீழே விழக் கூடாது. விழுந்தால் அது அபசாரம் என்று கூறும் விதிமார்க்க வாதிகள் நிறைந்த இந்த உலகில் தம் முடியைக் கோயிலில் எரித்தாவது தொண்டு முட்டுப்படாமல் நடை பெற வேண்டும் என்று நினைத்த இவர்கள மெல்வினைத் தொண்டர்களாவர். தலை முடியை விளக்கில் வைத்தால் வினாடி நேரத்தில் அது சாம்பலாகும். விளக்கில் திரி போல நின்று அது எரியப்போவதில்லை. அப்படி இருக்க இவர் ஏன் இக்காரியத்தைச் செய்யவேண்டும்? முடியை எரித்த போது அது திரி போல் நின்று எரிந்தது என்று புராணம் கூறவில்லை. ஒரு வினாடியில் தம் முடியை இழந்தது தவிர இதனால் கிடைத்த பயன் யாது? ஆனால் அறிவின் அடிப்பைடயில் நிகழும் இத் தடை விடைகள் இந்த அடியார்களிடம் செல்லுபடியாவதில்லை. இந்தத் தடை விடைகள் அவர்கள் மனத்தில் தோன்றி இருந் தால் அவர்களும் நம் போன்ற சராசரி மனிதர்களாக ஆகி விடுவார்களே தவிர அடியார்களாக ஆவதில்லை. ஆம் பல சமயங்க களில் பகுத்தறிவுக்கு விடை கொடுத்துத்தான் செயற்கருஞ் செய்கை செய்தவராக ஆக முடியும்.