பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவழிகளின் போராட்டம் *- 33.7 சிவனடியார் வேடந்தாங்கித் தகாத செயல்களில் ஈடுபட்டவர் களிடம் மெய்ப்பொருளும், ஏனாதியும் உயிரையும் பணயம் வைத்தனர். மெய்ப்பொருளையும் ஏனாதியையும் கொன்றவர் கள் அந்த வேடத்துக்கே இழுக்கைத் தேடியவர்கள் எனவே இவ்வேடம் அணிந்தவர்கள் அனைவருமே சிவனடியார்கள் என்று கருதுவதும் தவறாகும். அதே போல இவ்வேடம் அணியாதவர் கள் சிவனடியார்களாக இருக்க முடியாது என்று கருதுவதும் தவறாகும். சிவனடியார்களாக, தொண்டர்களாக, அன்பர்களாக இருப்பதுதான் முக்கியமே தவிர இவ்வேடம் தனிப்பட்ட முறை யில் வேறு ஒன்றும் சாதித்ததாகப் பெரிய புராணம் கூறவில்லை. உண்மைத் தொண்டர்களை அடையாளம் காட்ட இது பயன் பட்டிருக்கலாம். எனவே இவ்வேடம் நன்மையோ தீமையோ விளைப்பது அதனை அணிந்தவர்கள் பண்பாட்டையும் மனநிலை யையும் பொறுத்ததே தவிர வேடத்திற்கும் அவர்கள் நடந்து கொள்வதற்கும் நேரிடைத் தொடர்பு ஒன்றும் இல்லை. புற வேடத்துக்குப் பெருமதிப்புத் தருவது என்பது மெய்ப் பொருள், கலிக் கம்பர், ஏனாதி, புகழ்ச் சோழர் என்பவர்களின் தனிப்பட்ட கொள்கையாகும். இது பற்றிக் கவலைப்படாத கண்ணப்பர், சாக்கியர் என்பவர்களும் சிறந்த நாயன்மார்களாகவே போற்றப் பெற்றனர். ஆளுடைய பிள்ளையே கண்ணப்பரைப் போற்று கிறார். இக்கருத்தைச் சாக்கியர் புராணத்தில் கவிஞர் வலியுறுத்து கிறார். 'எந்நிலையில் நின்றாலும், எக்கோலம் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்என்றே துன்னிய வேடந்தன்னைத் துறவாதே தூயசிவம் தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார்' " 'அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலமெல்லாம் ஆள் என்ன வல்லார் இவர் அவ் வேடத்தை - 4. w - . 9 மாற்றா தன்பின் வழி நிற்பார் என்ற இவ்விரு பாடல்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை, எந்நிலையில் நின்றாலும் எந்த வேடங் கொண்டாலும் அது பற்றிக் கவலை இல்லை. சங்கரன்தாள் மறவாமை ஒன்று தான் பொருளாகும் என்ற கருத்தினால் சாக்கியர் தம் பெளத்த மத வேடத்தைத் துறக்கவே இல்லை என்று சேக்கிழார் கூறும் போது, விதி மார்க்கத்தாருக்கு விடை கூறும் முறையிலேயே இப்பாடலை