இருவழிகளின் போராட்டம் 339 சாக்கியரைப்பொறுத்த மட்டில் ஒரு நாள் ஒர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று திறந்த வெளியில் இருந்த சிவலிங்கம் ஒன்றைக் கண்டார். அவரையும் அறியாமல் மனத்தில் எல்லையற்ற களிப்பும் உவகையும் பிறந்தன. அவர் இந்த ஆனந்தத்தின் காரணத்தை அறிய முடியவில்லை. இந்த நிலையில், 冷 母 * 铬 令 姊 蜴 岭 > * 蛤 始 8 修 锣 歌 மாடோர் வெள்ளிடைமன்னுஞ் சிவலிங்கம் கண்டு மனம் நீடோடு களியுவகை நிலைமைவரச் செயல் அறியார் பாடோர்கல் கண்டதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார். ' மறு நாள் அவருடைய மனத்தில் முதல் நாள் நிகழ்ச்சியைப் பற்றிய சிந்தனை ஒடத் தொடங்கியது. தம் செயலைப்பற்றி எண்ணத் தொடங்கிய சாக்கியர் தாமாகத் தம் தற்போதத்தில் கல் எறியவில்லை என்பதை உணர்ந்தார். அப்படியானால் தம்மை இது செய்யுமாறு தூண்டியதும் இறையருளே என்ற முடிவுக்கு வந்தார். தான் கருவியாக மட்டும் நின்று அவனருளாலே ஒரு செயல் நிகழ்த்தப்பட்டது என்றால் மறுபடி யும் அதனைத் தொடர்ந்து செய்வதுதான் தம் கடமை என்பதை உணர்ந்து மறுபடியும் தொடர்ந்தார் என்ற பொருளில் ஆசிரியர், 'அன்றுபோய்ப் பிற்றைநாள் அந்நியதிக்கு அணையுங்கால் கொன்றை முடியார்மேல் தாம் கல் எறிந்த குறிப்பதனை நின்றுணர்வார் 'எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் குறிப்பே' என்று அதுவே தொண்டாக என்றும் அது செய நினைந்தார் ‘’ என்று பாடுதல் காணலாம். சேக்கிழார் இந்த வரலாற்றைப் பாடும் முறையிலிருந்து ஒன்றை அறிந்து கொள்ள முடிகிறது . சைவம் என்பது நிறுவப் பெற்ற சமயமாக (Established) இல்லாமல் பரந்துபட்ட உலகம் தழுவிய சமயமாக (Universal) இருத்தல் வேண்டும் என்பதைச் சேக்கிழார் விரும்புகிறார் என்பதேயாகும். சட்டதிட்டங்களுடன் கிரியைகட்கு அதிகமாக இடந்தரும் நிறுவப் பெற்ற சமயம், சாக்கியர் போன்றவர்களை உறுதியாக ஏற்றுக் கொள்ள மறுத்து விடும். திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் புது முறையில் வளர்க்கப்பெற்ற சைவ சமயத்துக்கு அத்தகைய நிலை
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/369
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை