பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 0 பெரியபுராணம்-ஒர் ஆய்வு இல்லை என்பதைக் காட்டவே சேக்கிழார் காரண காரிய விளக்கத்துடன் இவ்வரலாற்றை விரிவாகப் பேசுகிறார். திண்ணனார், சிவகோசரியார் வழிபாட்டு முறை வேறுபாடுகள் அன்பு நெறியில் எது செய்தாலும் அது எம்பிரானுக்கு ஏற்ற தாகும் என்பதை மனித அறிவு ஆராய்ச்சி கொண்டு நிறுவிய பகுதியாகும் சாக்கியர் புராணம். விதிமார்க்கத்தை விடப் பக்தி மார்க்கத்தையே இறைவனும் ஏற்றுக்கொள்கிறான் என்பதை விளக்கவும், பக்தி மார்க்கத்தில் செல்கின்ற ஒருவனுடைய வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதையும், அவர் தொண்டு எவ்வாறு செயல்படும் என்பதையும், விரிவாக விளக்க எழுந்ததே கண்ணப்பர் புராணமாகும். காளத்தியிலுள்ள குடுமித் தேவரை வாலாயமாக வழிபடும் சிவவேதியர் 'சிவகோசரியார் என்பவராவர். விதி மார்க்கத்தில் மிக மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டுள்ள இவர் 'அனுசிதம்' என்று ஆகமத்துள் கூறப்பெற்றவற்றை எந்த நிலையிலும் அனுசிதம் என்றே கருதுபவர். இவருக்கு எதிராகத் திண்ணனார் வழிபடுகின்றார். அவர் முன்பின் குடுமித் தேவரைக் கண்டது மில்லை. ஏன்? அந்த மலையைக் கூடக் கண்டதில்லை. இறைவன் என்ற சொல்லையே அறியாதவர். 'கொல், எறி, குத்து என்றார்த்துக் குழுமிய ஓசை' அன்றி வேறு நல்லசொல் பழகாத இடத்தில் பிறந்து அதிலேயே வளர்ந்தவர். வேட்டைக்குச் சென்ற அவர் ஒரு பன்றியைத் துரத்திச் சென்று இறுதியில் அதனைக் கொன்ற இடத்தில் இருந்த மலையைக் கண்டு அது என்ன வென்று தம்முடன் வந்த நாணனைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வேடிக்கை பார்த்து வரவே மேலே செல்கிறார். மேலே செல்கின்ற நிலையில் திண்ணனார், 'ஆவது என் இதனைக் கண்டு: இங்கு அணைதொறும் என் மேல் பாரம் போவதொன் றுளது போலும்; ஆசையும் பொங்கி மேன்மேல் மேவிய நெஞ்சம் வேறோர் விருப்புற விரையா நிற்கும் தேவர் அங்கு இருப்பது எங்கே? போகென்றார் - திண்ணனார்தாம். ' என்றாராம். செயற்கை வாழ்வில் ஈடுபடாத, கல்வியறிவில்லாத ஒரு மனிதருக்கு உள்ளுணர்வினால் தோன்றும் பக்தியாகும் இது. 'இங்கு அணைதொறும் என் மேற்பாரம் போவதே போன்றுளது என்று யார் கூறமுடியும்? இயற்கையோடியைந்த வாழ்வு வாழ்ந்து பொறி புலன்கள் கூர்மையாகப் பணி செய்யும் நிலையில் இருப்பவர்