34 2 பெரியபுராணம்-ஒர் ஆய்வு இவர்தமைப் பிரிய ஒண்ணாது என் செய்கேன்! இனி யான்சால இவர்தமக் கிறைச்சி கொண்டிங் கெய்தவும் வேண்டும்'. ' என்ற முறையில் அவர் அன்பு வளர்ந்து விசுவரூபம் எடுத்து விட்டது. குடுமித் தேவருக்குப் பசியைத் தணிக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தம்மை மறந்தார், தம் பசியையும் உடன் வந்த நாணனையும் மறந்து கீழே இறங்கி மலையில் உள்ளவருக்கு உணவு தேடப்புறப்பட்டு விட்டார். இவருடைய செயலை உடன் சென்ற நாணன், 'அங்கிவன் மலையில் தேவர்தம்மைக்கண் டனைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போதாவல்லுடும் பென்ன நீங்கான் இங்குமத் தேவர் தின்ன இறைச்சி கொண்டேகப் போந்தான் நங்குலத் தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க் கென்றான' என்று பேசும் கணிப்பு முற்றிலும் சரியானதே. இங்ங்னம் கண்டதும் காதல் கொண்டு முற்றிலுமாகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தான் பெரியோர் விரும்பினர். இப்படிக் கண்டவுடன் முருகி வளர்கின்ற அன்பை, பக்தியை, காதலை அகத்துறைப் பாடல் ஒன்றில் வாக்கின் வேந்தர் தமக்கே உரிய தெளிவுடன் பாடுகிறார். 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவனிருக்கும் வண்ணங் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள்; அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே ' கண்ணப்பர் வாழ்க்கையை அப்படியே இப்பாடல் படம் பிடித்துக் காட்டுவதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய முறையில் இவ்வளவு விளக்கமாகவும் தெளிவாகவும் ஒருவருடைய முழு மாற்றத்தை வாகீசர் பாடத் துண்டுகோலாய் இருந்தது கண்ணப்பர் வரலாறேயாகும். பிள்ளையார், வாகீசர் ஆகிய இருவருக்கும் திண்ணனார் வரலாறு நன்கு தெரிந்திருந்தது
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/372
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை