இருவழிகளின் போராட்டம் 34.3 என்பதனைத் தேவாரம் மூலம் அறிய முடிகின்றது. எனவே அவ் வரலாறே வாகீசர் இப் பாடலைப் பாடக் காரணமாக அமைந்திருத்தல் வேண்டும். அனைத்யுைம் துறந்து, ஏன்? தம்மையும் முழுவதுமாகத் துறந்துவிட்ட ஒரு மனிதரை என்ன என்று கூறுவது? இப்பொழுது நாகன் மகனாகிய திண்ணன் உடம்பில் ஏதோ ஒன்று புகுந்து விட்டது. அவருடைய உடம்பு, பொறி புலன்கள், அந்தக்கரணங் கள் தற்போதம் முதலிய எதுவும் அவர்பால் இல்லை. அப்படி யானால் இவரை என்ன என்று கூறுவது? சேக்கிழார் ஒருவர் தாம் இதற்கு விடை கூறமுடியும். 'முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் இன்புறுவே தகத்திரும்பு பொன் ஆனாற் போல் யாக்கை தன்பரிசும் வினை இரண்டும் சாரும்மலம் மூன்றும் அற அன்பு பிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ?' ' என்பதே சேக்கிழார் தரும் விடையாகும். சர்க்கரையில் மிளகாய், பாகற்காய் என்று மிட்டாய் செய்யப் பெற்றாலும் அது முழுதும் சர்க்கரையாய் இருப்பதுபோல அன்பென்ற பண்பே இப்பொழுது திண்ணன் வடிவு கொண்டு கை, கால், உடம்பு முதலிய உறுப்புக்களுடன் உலவுகிறது. இவருக்கு எதிராக விதிமார்க்கத்தில் தலை நின்ற சிவகோசரியார் திண்ணனார் படைத்த ஊனமுதை அவர் இல்லாத பொழுது வந்து பார்த்து, 'தேவ தேவ்ே சனே! திருமுன்பே இது செய்து போவதே! இவ்வண்ணம் புகுதநீர் திருவுள்ளம் ஆவதே? எனப் பதறி அழுது விழுந்தலமந்தார்.' இவ்வாறு துயருற்ற பெரியார், தம் கருத்தில் அனுசித மாகப்பட்ட இறைச்சி முதலியவற்றை அலகிட்டு மாற்றிவிட்டு மறுபடி வந்து திருமுகலியில் குளித்துவிட்டுமேலே சென்று தம் வழக்கம் போல் வழிபாடாற்றிப் போனார். 22 இந்த நாடகம் ஐந்து நாட்கள் நடைபெறவும், சிவகோசரி யார் கனவில் தோன்றிய இறைவன், 'அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் 24
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/373
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை