இருவழிகளின் போராட்டம் 345 மற்றை நாள் போல வந்து திருமுகலிப் புனல் மூழ்கினார்’ என்று பேசுகிறார். அதாவது முதல் நாள் இந்த இறைச்சி முதலியவற்றைக் கூட்டி எறிந்துவிட்டு மறுபடியும் கீழே வந்து புனலில் மூழ்கிப் பிராயச்சித்தம் செய்தாரோ அதே போல இறைவன் கனவில் பேசிய மறுநாளும் செய்தார் என்று கூறுவதன் மூலம் இவர்கள் தங்கள் வழியில் எத்துணை அளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதைக் காட்டிவிட்டார். இப்புராணத்தில் சேக்கிழார் இவை இரண்டு வழிகளுக்கும் டையே உள்ள வேறுபாட்டைக் காட்டுவதுடன் மற்றொன்றை யும் அறிவிக்க விரும்புகிறார். விதிமார்க்கத்தில் செல்கின்றவர் இறைவனைக் கனவில்தான் காண முடிந்தது. ஆனால் பக்தி மார்க்கத்தில் சென்ற திண்ணனார் ஆறாவது நாளில் இறைவனை நேரே காணும் வாய்ப்பைப் பெறுகிறார். முற்றத்துறந்த பட்டினத்துப் பிள்ளயுைம் 'நாள் ஆறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன்' என்றும், அன்பே வடிவான மணிவாசகர் 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி " என்றும் பாட நேர்ந்தது. இவ்வாறு கூறுவதால் சிவகோசரியாருக்குப் பக்தி அல்லது அன்பு இல்லை என்று கூறியதாகாது. கண்ணப்பர் அன்பு 'நான்' என்பது முற்றிலும் இல்லாத அன்பு. அதனால்தான் 'அன்பு பிழம்பாய்த் திரிவார்' என்று காப்பியப் புலவர் கூறினார். சிவகோசரியார் போன்றவர்கள் அன்பு எத்துணை அதிகமாயினும் அதன் அடியில் 'நான் இருக்கத்தான் செய்கிறது. 'நான் அன்பு செய்து அவனைப் பூசித்து அவன் திருவடியை அடையவேண்டும்' என்ற குறிக்கோளில் பிறந்த அன்பாகும் அது. திண்ணனாரின் அன்பு பயன் கருதாத அன்பு. கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி விடும் வேண்டாத வீரத்திற்குக் கடை காலாக உள்ள அன்பாகும் இது. இவை இரண்டையும் இவ்வளவு நுண்ணிய முறையில் பிரித்துக் காட்டக் கூடியவர் 'தொண்டர் சீர்பரவ வல்லவர் ஆகிய சேக்கிழார் ஒருவரேயாவார்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/375
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை