பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவழிகளின் போராட்டம் 3 4 7 கோனுக்குச் சூலை நோய் உணடாயிற்று. எத்துணை மருத்துவஞ் செய்தும் வலிபோகவில்லை. இந்த நிலையில் கலிக்காமர் கனவில் தோன்றிய இறைவன் உனை வருத்துஞ் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி, முந்துற ஒழியாது' என்று கூறினார். இதனைக் கேட்ட கலிக்காமர் சிவபெருமானுக்குக் கூறிய விடை வியப்புக்குரியது. 'எம்பிரான்! எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் தம்பிரான் நீரே என்று வழி வழி சார்ந்து வாழும் இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்றீரும் சூலை வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து ’ 'மற்றவன் தீர்க்கில் தீரா தொழிந்தெனை வருத்தல் நன்றால் பெற்றம்மேல் உயர்த்தீர்! செய்யும் பெருமையை அறிந்தார் யாரே உற்ற வன்தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன ’’ எந்தை, தந்தை, தந்தை என்பதால் பல தலைமுறைகளாக இறைவன் நாயகன், உயிர்கள் அவனுக்கு அடிமைகள் என்ற கருத் தில் வாழும் அன்பர்கள் குடியே, தங்குடி என்கிறார். அத்தகைய பரம்பரை அடிமையாகிய தனக்குற்ற நோயை இறைவன் தானே அருள் செய்து தீர்க்காமல், அந்த இறைவன் தானே திருமணத் திற்குச் சென்று புதிதாக ஒரு அடிமையைச் சேர்த்துக் கொண்டு வந்து, இந்தப் பழைய அடிமையின் நோவை அந்தப் புதிய அடிமை வந்து தீர்க்கவேண்டும் என்று கூறுவதைக் கலிக்காமர் சீரணிக்க முடியவில்லை. நட்பிற்கூடப் பழமை பாராட்டுந் திறம் உண்டே, அப்படி இருக்கப் பழைய அடிமையின் நோயைப் புதிய அடிமை தீர்ப்பது என்றால் அந்த எஜமானன் பழைய அடிமையைத் துறந்துவிட்டான் என்றுதானே பொருளாகிறது. தலைவனே இவ்வாறு கூறிவிட்டான் என்றால் வேறு வழியே இல்லை. ஒன்று மானத்தை விட்டு அவன் வந்து தீர்க்கட்டும் என்றிருக்கலாம். இறைவனே இவ்வாறு பணித்து விட்டான் என்று சமாதானமும் கூறிக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு செய்வது இந்த உயிரின் மேல் கொண்ட ஆசையால் செய்யப் பெறுவதே தவிர வேறு இல்லை, எனவே கலிக்காமர் தாம் கொண்ட கொள்கையை இறைவனுக்காகக்கூட விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. எனவே இறைவனை நேரே பார்த்து மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்தெனை வருத்தல் நன்றால் என்று கூறிவிடுகிறார்.