பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.48 பெரியபுராணம்- ஒர் ஆய்வு இந்த அடியார்களின் கொள்கைப் பிடிப்பில் இது ஒரு வியப்புக் குரிய பகுதியாகும். எல்லாம் அவனே என்று கருதி வாழ்ந்தாலும் தம் கொள்கைக்கு ஊறு நேர இவர்கள் இடந்தருவதில்லை. அதற்கு ஊறு நேர யாவர் காரணமாயினும், அது இறைவ னாகவே இருப்பினும் கொள்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பில் இறைவனையும் ஒதுக்கி விடுவது சற்றுப் புதுமையான செயலாகும். இறைவனையும் ஒதுக்கி விட்டுக் கொள்கையைக் காப்பதனால்தான் இவர்கள் நாயன்மார்கள் எனப் பெற்றனர். தம்கொள்கையைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அக்கொள்கைப் பிடிப்புக்கு யார் எதிரியாக இருப்பினும், அது அவர்கள் வழிபடும் இறைவனாகவே இருப்பினும் எதிர்ப்பதும், அப்படி எதிர்ப்பதில் தம் உயிரை, குடும்பத்தை எதை வேண்டு மானாலும் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்வதும் இவர்களுடைய தலையாய இலக்கணமாகும். - விறல் மிண்டர் மலை நாட்டில் பிறந்து இறைவன் உறையும் தலங்கள் தோறும் சென்று வழிபட்டுக் கொண்டே திருவாரூர் வந்து சேர்கிறார் விறன்மிண்டர் என்பவர். அங்குத் தேவாசிரிய மண்டபத்தில் இருக்கும் அடியார்களிடம் ஈடுபட்டு அவர்களுள் ஒருவராகி அங்கேயே தங்கி விட்டார். ஒரு நாள் நம்பியாரூரர் மாப்பிள்ளைக் கோலத்துடன் கோயிலுக்குள் நுழைய வந்தார். திருவாரூரைப் பொறுத்தமட்டில் அந் நாளில் யார் திருக்கோயிலி னுள் நுழைவதானாலும் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள அடியார்களை வணங்கிவிட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என்ற பழக்கம் இருந்து வந்தது. சுந்தரர் ஊருக்குப் புதியவர். திருமணமான புதிது; இறைவனும் மக்களும் வன்றொண்டர், தம்பிரான் தோழர் முதலிய பட்டங்களைத் தந்து அவரைப் போற்றுவாராயினர். எனவே அவர் கோயிலினுள் நுழையும் போது இவர்களை எப்பொழுது அறிந்து கொண்டு வழிபடப் போகிறோமோ?’ என்று மனத்தில் உள்ள உறுத்தலுடன் கோயிலி னுள் நுழைந்தார். சுந்தரர் வரலாறும் பெருமையும் நன்கு அறியப்ப்ட்டவை ஆகலின், பிற அடியார்கள் யாரும் அதற்கு மறுப்புக் கூறத் துணியவில்லை. மேலும் அங்குள்ளவர்கள் அடியார்களே எனினும் எத்தனை பேருக்கு இறைவன் நேரே காட்சி நல்கித் தடுத்தாட் கொண்டான்? எனவே சுந்தரரிடம் அவர்கட்கு அச்சத்துடன் கூடிய அன்பு இருந்திருக்க வேண்டும். அதனாலேயே அனைவரும் செய்யும் காரியத்தை அவரும் செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தாமல்