முன்னுரை 1 1 வண்டுது பொலிதார் திருளுெம ரகலத்துக் கண்பெரு திகிரி கமழ்குரல் துழாஅய் அலங்கல் செல்வன் சேவடி பரவி........ 3 6 என்றும் கூறுவதால், சிவபிரானையும் திருமாலையும் இவர்கள் நன்கு அறிந்து போற்றினர் என்றும் கருத இடமுண்டாகிறது. மேலே காட்டிய எடுத்துக்காட்டுக்களிலிருந்து ஒன்றை ஊகிக்க முடிகிறது. பழமையான வேதங்களில் கூறப்பெற்ற வேள்விகளை இவர்கள் செய்ததாகத் தெரியவில்லை. வேதத்தை அடுத்துத் தோன்றிய பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் என்பவை தோன்றிய காலகட்டத்தின் பின்னரே வேள்விகள் நடைபெற்றிருக்க வேண்டும். அதனால்தான் பழைய வேதங் களில் கூறப்பெற்ற வேள்வித் தெய்வங்களாகிய இந்திரன், அக்னி, பிரஜாபதி போன்றோர் குறிப்பு எதுவும் இச் சங்கப் பாடல்களில் இடம் பெறவில்லை. தொல்காப்பியம் மிகப் பழமை பெற்றிருந்தமையின், வேதத்தில் போற்றப் படும் இந்திர னுக்கும் வருணனுக்கும், தான் வகுத்த நிலப் பிரிவினையில் இடந் தந்தது. ஆனால் சங்கப்பாடல்கள் தோன்றிய காலகட்டத்தில் பழைய வேதங்களில் போற்றப்பெற்ற இந்திரனும், வருணனும் தம் செல்வாக்கை இழந்துவிட்டமையின், இவர்கள் இலக்கியங்களில் இடம் பெறவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சங்கப் பாடல்கள் என்று இன்று நமக்குக் கிடைத்துள்ள மொத்தப் பாடல்கள் 2381 ஆகும். 3 வரியுள்ள பாடலும் 700க்கும் மேற்பட்ட வரிகளையுடைய பாடலும் ஒவ்வோர் எண்ணிக்கை பெற்றதால் இக் கூட்டுத்தொகை கிடைத்துள்ளது. இவற்றைப் பாடிய புலவர்கள், பெயர் தெரிந்த 473 பேரும் பெயர் தெரியாத 102 பேர்களுமாவர். காணாமற்போன பாடல் களின் (பதிற்றுப் பத்தின் முதல், இறுதிப் பத்துக்கள், புறத்தின் அகப்படாத பாடல்கள்) எண்ணும் அவற்றைப் பாடினவர்கள் எண்ணும் இத் தொகையுள் அடங்கவில்லை. எனவே, 2381 பாடல்களில் ஏறத்தாழ முப்பது இடங்களில் மட்டுமே வேள்வி பற்றிப் பேசப்படுகிறது. அதுவும் மிகப் பெரிய மன்னர்களாகிய பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, நலங்கிள்ளி, கரிகாற் பெருவளத்தான் என்ற மன்னர்களைப் பற்றிய பாடல் களில்தான் வேள்விக் குறிப்பு வருகிறது. நூற்றுக்கணக்கான மன்னர்களைப் பற்றிய ஆயிரக் கணக்கான பாடல்களில் ஒரு கைவிரல் அளவில் எண்ணப் படக் கூடிய மன்னர்களே வேள்வி
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை