பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை I 3 மரபியல் 85ஆவது நூற்பாவில் தொல்காப்பியனார் விளக்குகிறார். வேளாளர்க்கு உரிய தொழிலைக் கூறும் பகுதியில் இச் சூத்திரம் வருவதாயினும், இதற்கு முன்துத்திரமாகிய 84ஆம் நூற்பாவில் 'மண்பெறு மரபில் ஏனோர்க்கும் உரிய என்று கூறி விட்டு அடுத்து 'அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (85) என்று கூறுகிறார். 'ஏனோர்க்கும் என்று உம்மை கொடுத்துக் கூறியதால், வேளாளர் ஒழிந்த பிறர்க்கும் என்ற பொருளைப் பெறவைத்து ஆசிரியர் அடுத்த நூற்பாவில் அன்னராயினும் என்று மறுபடியும் உம்மை கொடுத்துப் பேசுவதால், நான்குவகை வருணத்தாரும் தமக்குரிய தொழில்களைச் செய்யாவழி இழிந்தோராவர் என்பதே பொருளாம். அந்நிலையில் அரசன் தரும் மதிப்புடைப் பொருள் களாகிய 'வில்லும், வேலும், கழலும், கண்ணியும், தாரும், ஆரமும், வாளும் (84) பெறும் தகுதியை இந்த இழிந்தவர்கள் இழந்துவிடுவர் எனப் பேசுகிறார். தமக்குரிய வேட்டலைச் செய்யாமல், சங்கறுக்கும் தொழிலில் ஈடுபட்டபார்ப்பனர் பலராய் இருத்தலைக் கண்ட ஆவூர் மூலங்கிழார், இவர்களின் எதிராகப் பல வேள்விகளைச் செய்த விண்ணந்தாயனைக் கண்டதும் அவனைப் புகழ்ந்து பாடியது முறையேயாகும். புறம் 166 ஆம் பாடல் குறிப்பது யாரை? அப் பாடற் பொருள் இனி விண்ணந்தாயனை அவர் பாடிய புறம் 166ஆம் பாடலின் முதல் 9 வரிகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கன. பல வேள்விகள் இவன் செய்தான் என்று கூறும் புலவர், வேதங்களைக் குறிப்பிடும்பொழுது சிவபெருமான் வாயில் ஓயாது ஒலிக்கும் வேதங்கள் என வேதத்திற்கு அடைமொழி தருகின்றார். 'நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈர் இரண்டின் ஆறு உணர்ந்த ஒரு முது நூல் இகல் கண்டார் மிகல் சாய்மார் மெய்யன்ன பொய் உணர்ந்து பொய் ஒராது மெய்கொளிஇ மூவேழ் துறையும் முட்டு இன்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக' 39 என்ற இந்த ஒன்பது வரிகளிலும் கூறப்பெற்ற கருத்துச் சிந்திப் பதற்கு உரியது. இவ் வரிகளில் பல செய்திகளைக் கவிஞர் கூறுகிறார். -