2. வேத கால ருத்ர சிவன் ரிக் வேத்தில் காணப்பெறும் ருத்ரன் வேதங்களிற் காணப்பெறும் ருத்ர சிவனைப் பற்றி இங்குப் பேச வேண்டிய இன்றியமையாமை உண்டு. சென்ற அதிகாரத்தில் காட்டப்பெற்றபடிச் சங்க இலக்கியத்தில் வேதம், வேள்விகள், இவற்றை அறிந்து நடாத்தும் அந்தணர் என்பவர் பற்றியும் ஒரளவு பேசப் பெறுகிறது. அப்படியானால், வேதங்களில் போற்றப்படும் தெய்வங்கள் இத் தமிழகத்தில் எந்த அளவு போற்றப்பெற்றனர் என்று காண்பது பயனுடையதாகும். வேதம் போற்றிய தெய்வங்களை அடுத்து, வேதம் ஓயாமல் பேசும் வேள்விகள் இங்கு நடைபெற்றனவா? என்பதும் அறியப்பட வேண்டும். வேள்விகள் ஒரோவழி நடைபெற்றன என்று சங்க லக்கியங்கள் பேசுகின்றனவே, அப்படியானால் இந்த வேள்வி கள் வேதம் கூறிய அதே முறையில் நடைபெற்றனவா? அல்லது வேறு முறையில் நடைபெற்றனவா? என்பதையும் ஆராய வேண்டும். இங்கு வைக்கப்பட்ட வினாக்கள் மிகமிக இன்றியமையாதவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. எனினும் இவற்றிற்கு விடை காண நம்மிடம் உள்ள கருவி சங்கப் பாடல்கள் என்று கூறப்பெறும் தொகுப்பு நூல்களும் தொல்காப்பியமுமே ஆகும். கவிதை பாட வரும் புலவன் இந்த வினாக்கட்கு விடை கூற வேண்டிய கடப்பாடு உடையவன் அல்லன். ஆனாலும், தான் காணும் உலகில் நிகழும் நிகழ்ச்சிகளின் தாக்கத்திலிலுந்து எந்தக் கவிஞனும் விடுபடவும் முடியாது. எனவே ஒரு குறிப்பிட்ட கால எல்லையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் கவிஞன் படைத்த கவிதைப் படைப்புக்கள் அவன் காலத்தையும் அதில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையினையும், அவர்கள் எண்ண ஓட்டங்கள், குறிக் கோள்கள், நாகரிகம், பண்பாடு ஆகியவைபற்றியும் பிரதிபலித்தே தீரும். பிற்காலத்தில் உள்ளவர்கள் தமக்குச் சில நூற்றாண்டின் முன்னர் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/47
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை