22 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஆக்குகிறேன். என்னை விட்டுவிடு' என்று வேண்டியதால் ருத்ரனுக்கு இப்பெயர் வந்தது.' ருத்ரனே படைப்பின் விதையை உற்பத்தி செய்கிறான். அந்த விதை பூமியில் விழுமாறு அம்பெய்கின்றவனும் ருத்ரனே. தானே காரணமாக நின்று உற்பத்தி செய்த அதனைத் தானே முன்னின்று அழிக்கவும் செய்கிறான் ருத்ரன். ஒன்றுக்கொன்று முரண்பட்ட இச்செயல்களைச் செய்தல் ருத்ரனுக்கு இயல்பாய் அமைந்துள்ளது. இந்த மண்ணில் மேலும் மேலும் புதிய உயிர் வருக்கங்கள் தோன்றுமாறு அவுனே படைக்கப் போகிறான். இப் பூடைப்புத் தொழிலே, அழித்தல் தொழிலுக்கு வித்தாய் அமைகின்றது. ' உற்பத்தி தொடங்கப் போகுமுன் தெய்வங்கட்கு உண்டான அச்சத்துடன் கூடிய அதிர்ச்சியில் அவர்கள் கலங்கி நிற்கையில், அறிவு வடிவான அப்பேரொளி மாபெரும் ஆற்றலைத் தன்னுள் தாங்கியதும், புதிதாக உள்ளதுமான ஒரு சொல்லை உண்டாக் கிற்று. அதனை விடுவித்தவன் 'ரெளத்திரபிரம்மன் எனப்படும் ருத்ரனேயாவான். ' மைத்ராயணி ஸம்ஹிதையின்படிக் கூற வேண்டுமாயின் ரெளத்ர பிரம்மன் உயர் மட்ட நிலையிலும் ருத்ர சிவன் கீழ்மட்ட நிலையிலும் தொழிற்படுகின்றனர். ரிக்கிலும் பிறவேதங்களிலும் வரும் அவன் உடல் வருணனை ஐத்ரேய பிராமணத்தின்படி பிரஜாபதி-உஷாவின் தொடர் பைத் துண்டிக்க வேண்டும் என்று நினைத்த தெய்வங்கள் எல்லா இடங்களிலும் உள்ள மிகக் கொடுமையான வடிவங்களையெல் லாம் ஒன்றுசேர்த்து உருவாக்கி அந்த வடிவை பிரஜாபதிஉஷாவின் தொடர்பைத் துண்டிக்க அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்பும் பொழுது அந்த வடிவு திருப்தியடையும் வகையில் எல்லா விலங்குகட்கும் தலைவனாக இருக்கும் தலைமைப் பதவியை அந்த வடிவுக்கு வழங்கினார்கள். ' இதற்கு எதிராக, உஷாவுடன் தான் கொண்டுள்ள புணர்ச்சியை விடுவிக்க வந்த கொடிய வில்லோனாகிய ருத்ரனைப் பார்த்து 'என்னைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. விலங்குகட்கெல்லாம் தலைவனாக உன்னை ஆக்கு கிறேன்' என்று பிரஜாபதி கூறியதாக மைத்ராயணி ஸம்ஹிதை' கூறுகிறது. இனி ஏ.ஏ. மாக்டனால்ட் என்பவர் எழுதிய வேத கால தேவதைக் கட்டுக் கதைகள் (Vedic Mythology)என்ற நூலில் ருத்ரன் பற்றிய எல்லா வேதக் குறிப்புக்களும் தொகுத்துத் தரப்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை