வேத கால ருத்ர சிவன் 21 வேதம் போற்றும் தெய்வமாகிய அக்னியுடன் அவன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறான். ஆனாலும் ‘அக்னி ருத்ரனாகான்; புலி சினத்துடன் நிற்பது போல ருத்ரனும் நிற்கின்றான்' என்று கூறுகிறது தைத்ரீய ஸம்ஹிதை." எங்கே மனிதர்கள் அச்சத்தாலும் நடுக்கத்தாலும் விழுகிறார் களோ அத்தகைய இடங்களே ருத்ரனுக்கு உறைவிடமாகும். கொடிய வன விலங்குகட்கு அவனே தலைவனாவான். அவை அவனுடைய கொடிய ஸ்வபாவத்தின் அடையாளமாகும். இவ்வாறு ஸ்தபதப் பிராமணம் கூறுகிறது. ஆரியர்களின் சமுதாயத்தில் சேராமல் ஒதுங்கி நிற்பவர்களின் தலைவனே ருத்ரனாவான். ஏனைய வேதத் தெய்வங்கள் கிழக்குத் திசையில் உறைய, ருத்ரன் மட்டும் கொடிய மலைப்பகுதிகளையுடைய வட திசையில் உறைகின்றான். ஏனைய தெய்வங்கள் அனைவரும் பல ஹோமங்களைச் செய்து சுவர்க்கத்திற்குப் போய்விடவும் ருத்ரன் மட்டும் இங்கேயே (பூமியிலேயே) தங்க நேரிட்டு விட்டது. இவ்வாறு ஸ்தப்தப் பிராமணம் கூறுகிறது. '" பிராமணன்களில் கூறப்பெற்ற யாகங்களில் ருத்ரன் ஒதுக்கப்படுகிறான் இதே பிராமணத்தின் ' பகுதியின்படி ருத்ரன் ஸோம யாகத்திலிருந்து புறக்கணிக்கப் பெற்றவனாவான். ஆனால் அந்த யாகப் பலியில் தரையில் சிந்தியதையும் அவிஷ் தராமல் எஞ்சியதையும் பெற்றுக்கொள்ளும் உரிமை மட்டுமே ருத்ரனுக்கு உண்டு. யாக பலியாக உள்ள விலங்குகள் காயமடைந்துவிட்டால் அவை ருத்ரனுக்குரியவை.' அவனுக்கென்று அவிஷ் தருவது அவன் சினங் கொள்ளாமல் தங்களை விட்டுப் போய் விடுமாறு செய்வதற்கேயாகும் ', என்று ரிக்வேதம் கூறுகின்றது. ருத்ரன் என்ற பெயர்க் காரணம்-அவன் பசூநாம்பதி ஆவது எவ்வாறு? மேலும் ரிக் வேதத்தில் ருத்ரனைப் பற்றியும் அவனுக்குப் பசுபதி என்ற பெயர் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றியும் மூன்று விதமான கதைகள் பேசப்படுகின்றன. வேதம் போற்றும் தெய்வமான பிரஜாபதிக்கு இவன் தீங்கு செய்யத் தொடங்குகை யில் அத் தீங்கிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரஜாபதி ருத்ரனை வேண்டிக்கொள்ளும் பொழுது நான் விலங்குகட்கெல்லாம் உன்னைத் தலைவனாக (பது,நாம்பதி)
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை