பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'உலகப் படைப்பின் முதல் நாள் விடிந்தபொழுது, பிரஜாபதி யும் உஷையும் கூடியிருந்ததைத் தடுக்கும் வேடனாகக் காட்சி அளித்தவன், வேத ரிஷிகட்குத் தான் யார் என்பதை அறிவித் தான். தெய்வங்கள், வேடனாகக் கண்ட அவனை, ரிக் வேத தெய்வங்கள், தம் மந்திரங்களால் வடிவமைத்துக் காண முற்பட்டன. பின்னர் அவன் அஞ்சத் தகுந்தவனாகவே சாதாரண மனிதர்களாலும் காணப்பட்டான். மாடு மேய்ப்ப வர்களும், நீர்க்குடம் தாங்கி வரும் பெண்களும்கூட அவனைக் காண முடிந்தது. ஆயிரம் கண்கள் உடையவனாய் நெருப்புப் போன்ற நிறமுடையவனாய் கண்டங் கறுத்தவனாய் உள்ள அவனை அனைவரும் கண்டனர்.'" ருத்ரனுடைய கோபத்தையும் நூற்றுக்கணக்காக அவன் மேற்கொள்ளும் வடிவங்களையும் புகழ்ந்தும் அவனுடைய வில் அம்பு முதலியவற்றின் வலிமையைப் புகழ்ந்தும் அவை தம்மைத் துன்புறுத்தாமல் காக்க வேண்டும் என்று வேண்டியும் போற்றிய பாடல்கள் சதருத்ரீயம் என்ற பெயரில் யஜுர்வேதத்தில் இடம் பெற்றன. ரிக்கில் வரும் ருத்ரனின் வளர்ச்சியை யஜுர் வேதத்தில் தைத்ரீய ஸம்ஹிதையின்' பகுதிகளிலும் வாஜஸநேய ஸம்ஹிதையின் ' பகுதிகளிலும் காணலாம் தைத்ரீய ஸம்ஹிதையில் ருத்ரன் வளர்ச்சி ருத்ரன் தன் வில்லை மரத்தில் மாட்டித் தொங்க விட்டு விட்டு மனிதர்களை அணுகும்போது, அம் மனிதர்கட்கு மகிழ்ச்சி யையும் (சம்பு) இந்த உலகிலேயே அமைதியையும்(சங்கர) தருகிறான் என்று தைத்ரீய ஸம்ஹிதை" கூறுகிறது. மேலும் அவனுடைய அருளால் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் அவன் தரும்பொழுது சிவன்" என்று பெயர் பெறுகிறான். தைத்திரீய ஸம்ஹிதையில் காணப்பெறும் இந்த மந்திரங்கள் பின்னர்த் தனியே எடுக்கப் பெற்று ருத்ரம் என்ற பெயரில் வழங்கலாயின. ஸ்வேதாஸ்வதர உபநிடத்தில் சிவன் பெறும் வளர்ச்சி ஸ்வேதாஸ்வதர உபநிடதம்' ஆயிரம் கண்ணுடைய இந்த ருத்ரன் எண்ணற்ற முகங்களை உடையவன் என்று கூறு கிறது. ஒவ்வொரு மனிதனும் அவனுள் இருக்கிறான். ஏனென் றால் அவனே அனைவருள்ளும் இருக்கிறான் என்று கூறுகிறது. மனிதனுள் கடவுளும், கடவுளுள் மனிதனும் மாறிப் புகும் நிலை மிக விரைவில் தோன்றிவிட்ட்து. ஒவ்வொருவருடைய முகத்தி லும், தலையிலும், தொண்டையிலும் அவன் இருக்கிறான். ஒவ்