28 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கூடியதுமான இந்திரியங்கள் எனப்படும் ஐந்து ஆறுகள் பாயும் காணப்படுகின்ற இந்த உலகமாகவும், ஸ்வேதாஸ்வதர உபநிடதம், சிவனை வழிபடுகிறது." படைப்புக் காலத்தில் ருத்ரன் தான் மேற்கொள்ளப் போகும் பணிகளை விவரிக்கின்றான். அவன் எய்ய வேண்டிய அம்புகளை எய்யாமல் நிறுத்திக் கொள்வதால், அச்சத்தில் மூழ்கி இருக்கும் உயிர்கட்கு மறுவாழ்வளித்து, மரணத்திலிருந்து, விடுதலை அளிக் கின்றான். இறப்பைத் தரவும் நீக்கவும் கூடிய வன்மையைத் தன் பால் வைத்திருக்கும் கால காலனாகிய ருத்ரனை ரிக்வேதம்' மஹாமிருத்யுஞ்ச மந்திரத்தால் துதிக்கின்றது. யுக முடிவில் இப் பிரபஞ்சத்தை அழித்து இருள் நிறைந்த சூன்யத்தில் அழுத்தி விடுகிறான். வடிவற்றதும் ஆனால் தொடர்ந்து இருப்பதுமாகிய நிலையில் பிரபஞ்சம் இருக்கும் நிலை அது' சிவன் இப் பிரபஞ்சத்திலிருந்து வெளிப் போந்து புலன் அனுபவம் என்பதைத் தன்னுள் அழித்துக் கொள்கிறான். இந்த உலகத்திலிருந்து அடுத்த கரைக்குக்கொண்டு செல்லும் படகோட்டியாக அவன் உள்ளான் என்று தைத்ரீய ஸம்ஹிதை' பேசுகிறது. எப்பொழுது இருள் இல்லாமல் போகிறதோ அப் பொழுது அங்கே பகலும் இல்லை, இருளும் இல்லை. இருத்தல், g)(335.3%air-g)airsolo (Existence and non-existence) argårp இரண்டும் இல்லை. சிவன் ஒருவனே அங்கு உள்ளான் என்று ஸ்வேதாஸ்வதர உபநிடதம்' கூறுகிறது. அனைத்தையும் கடந்த வனாய், தோற்றுவித்தல், அழித்தல் என்று இரண்டையுஞ் செய் பவனாய் அழிவின் இருளில் இருப்பவனாய் அதே நேரத்தில் வாழும் உயிர்களின் தலைவனாய்ப் பசுபதி இருக்கிறான . சிவன் பற்றிய புராண காலச் செய்திகள் இதற்கு மேல் ருத்ரனை-சிவனைப்பற்றிய செய்திகள் கிடைப்பது புராணங்களிலேயேயாகும். பிரம்மாண்ட புராணம்' சிவன் ஸ்தானுவாக நின்றது பற்றி விரிவாகப் பேசுகிறது. படைப்பிற்கு முற்பட்ட முழுமையை இந்த ஸ்தானுவே தாங்கி நிற்கிறது. படைப்பின் விதையும் உயிர்களின் விரிவும் இதனுள் அடங்கியுள்ளன. ஞானம், சத்யம், துறவு, ஒளி என்பவை அவனிடமே உள்ளன. எல்லாத் தெய்வங்களினிடத்தும் அவனே இருக்கிறான் என்று பிரம்மாண்ட் புராணம் பேசுகிறது.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை