பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத கால ருத்ர சிவன் 3 I தந்து, இன்று நாம் கூறும் ஏகத்துவ அடிப்படையில் அச் சொற் களுக்குப் புதுப் பொருள் கொடுத்து, அக்னி முதலிய பல தெய்வங் களும் பிரஜாபதி, விசுவகன்மன் முதலியவர்களும் ஹிரண்ய கர்ப் பத்தைப்படைத்த நாம ரூபமற்ற பிரமன்' உட்பட அனைவரினும் மேலாக ஒரு பொருளை நிறுவ முயன்றது. ரிக் வேதத் தொடர் பான பிற்பட்ட பகுதிகள் இத்தெய்வங்களின் அடிப்படையில் ஒரு தெய்வத்தை, யாவரினும், யாவற்றினும் மேலாக நிறுவ முயன்றதை அறிய முடிகிறது. பன்னெடுங் காலமாகப் பேசப்பட்டு வரும் உவமைகள், உருவகங்கள் என்பவற்றையே பயன்படுத்தி இப்படி ஒரு மேம்பட்ட தெய்வத்தைப் படைக்க முயன்றுள்ளன என்றும் தெரிகிறது. அந்த உபநிடதம் அதனுடன் நிற்காமல் ருத்ர-சிவனே இவ்வாறு பேசப்பட்ட தெய்வம் என்பதாகவும் கூறுகிறது. 'மேலும் ரிக்வேதத்தில்' சாவித்திரிப் பாடல்கள் உள்ளன. 'எந்தப் படைத்தவனின் கண்கள், முகங்கள், கைகள், கால்கள் என்பவை எங்கும் நிறைந்துள்ளனவோ, இரவு-பகல், இருத்தல்g)(Ibágaö g)aörsolo (being and non-being) graörl Jausiba op Grajaör கடந்து நிற்கின்றானோ அந்த ருத்ர சிவனே அழிவில்லாதவ னாய் (aksaram) விரும்பத் தகுந்தவனாய் உள்ளான்' என்பதே அப்பாடல்களின் பொருளாகும் என ஸ்வேதாஸ்வத்ரமும் நிறுவுகிறது. இந்த முழு முதற் பொருள் மோட்சத்தில் நிறுவப் பெற்ற மரம் போல நின்று அனைத்திலும் ஊடுருவி நிற்பதாகும்.’’ என்று கூறுவதுடன் அக்கடவுள், கட்டை முழுவதும் எரிந்துபோன நெருப்பு என்றும் சாவா மூவாப் பெரு வாழ்வுக்கு அவன் பாலம் போல் உள்ளான் என்றும் கூறுகிறது. g § 'எனவே பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தும் அதனை ஊடுருவி யும் நிற்பவன் புருடன்' என்று கூறும் ரிக்வேத மந்திரபுருடன் இந்த ருத்ர சிவனே என்றும் அந்த உபநிடதம் பேசுகிறது. இதே உபநிடதம் தன்னுடைய முதல் அத்யாயம் இரண்டாவது பாடலில்' 'இந்தப் புருடன் என்பவனைத்தான் முதற் காரணன் என்று கூற வேண்டுமா? என்ற வினாவை எழுப்பிக்கொண்டு, எந்த ஒன்றால் அனைத்தும் நிரப்பப்படுகிறதோ எந்த ஒன்று பிரபஞ்சம் முழுவதையும் ஆள்கிறதோ அந்த ஒன்றே, அந்த மூல புருடனே, சிவன் தான் என்பதை நான் அறிந்துள்ளேன்' ' என்றும் கூறுகிறது. (இங்குக் காட்டப் பெற்ற இந்தப் பாடல்கட்குச் சிவன் என்று பொருள் கொள்ளாமல் சிவ சப்தத்திற்கு மங்களம் என்று பொருள் கூறி அது பிரமம் என்று அத்வைத பரமாகப் பொருள் விரிப்பவர்களும் உளர். (இராமகிருஷ்ண மடத்து வெளியீட்டின் மொழிபெயர்ப்பு)