004 தமிழ்நாட்டில் தமிழராகப் பிறந்த ஒருவர் ஒவ்வொரு பாடலிலும் தம்மைத் தமிழுடன் சேர்த்துக் கூறிக் கொள்ள வேண்டுமானால் அதற்குரிய வலுவான காரணம் ஏதாவது இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே அதற்குரிய காரணம் யாதாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் மனம் சென்றது. பெரியபுராணத்தையும், தேவாரங்களையும் படிப்பவர்கள் இதுவரை இந்த முறையில் அணுகவில்லையாகலின், இந்த ஐயங்களைத் தெளிவிக்க யாரிடமும் செல்ல முடியவில்லை. புறநானூற்றில் தொடங்கி, தேவார காலம் வரை வேதங்கள். சிவபெருமானுடன் சேர்த்துப் பேசப்படுகின்றன. எனவே வேதங்கள் தமிழ்நாட்டில் பண்டு தொட்டே பயிலப்பட்டு வந்தன என்பதை அறிய முடிந்தது. சங்கப் பாடல்களிலோ, சிலப்பதிகாரம் முதலியவற்றிலோ தமிழைப் பற்றிய தனிச்சிறப்பு எதுவும் கூறப்பெற வில்லை. ஆனால் 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி நடைபெறுங் காலத்தில் இந்தப் புதுமை நிகழ்கின்றது. அப்படியானால் சங்ககாலம் முதல், ஏழாம் நூற்றாண்டு வரை த்தமிழகத்தில் நடைபெறாத ஒரு நிகழ்ச்சி இப்பொழுது நிகழ்ந் ருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் காரணமாக ஒரு தமிழர், தமிழரிடையே வாழ்ந்தும்கூடத் தம்மைத் தமிழுடன் சேர்த்துக் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்று எண்ணத் தோன்றியது. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சியில் அதுவரை தமிழகத்தில் நடைபெறாத புதுமை ஏதேனும் நிகழ்ந் துள்ளதா? என்ற வினாவை எழுப்பிக்கொண்டு விடைகாண முற் பட்டேன். தண்டன் தோட்டச் செப்பேட்டின் மூலம் ஆயிரக்கணக்கான வைதிகர்கள் தமிழகத்தில் குடியேற்றம் பெற்ற செய்தியும் அவர்கள் பிழைப்பு நடத்துவதற்காக வேத பாடசாலைகள், கடிகைகள் என்பவை மிகுதியாகத் தோற்றுவிக்கப் பெற்றன என்ற செய்தியும் அறிய முடிந்தது. இந்தப் பல்லவர்கள் தொடக்க காலத்தில் தமிழினிடத்து எவ்வித ஆர்வமும் காட்டாமல், வடமொழியையே ஆதரித்தனர். வேதவழக்கொடுபட்ட இவர்கள் வேதங் கூறும் வேள்விகளையே
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/6
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை