பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத கால ருத்ர சிவன் 39 34) அடுத்துப் புராணங்கள் சிவத்துக்கு ஐந்து வகையான முகங்கள், எட்டுவகை இருப்புகள் என்பவற்றை அறிவித்தன. ஏறத்தாழ கி.மு. 400 வாக்கில் ருத்ரசிவத்தின் எண் குணம், அஷ்டமூர்த்தம் என்பவை நிறுவப் பெற்று விட்டன. 35) அடுத்து ஐந்து முகங்கள் பற்றிய செய்தி 36) வேத வழிபாட்டுடன் முற்றிலும் மாறுபட்ட கோயில் வழிபாட்டுத் தோற்றம். 37) கோயில் கட்டும் முறைகள், சிலைகள் வைக்கும் முறை, சிலைகள் அமைப்பு முறை என்பவைபற்றி ஆகமங்கள் நிரம்பப் பேசின. 38) சைவம், வைணவம் என்ற இரண்டிற்கும் சைவாகமங் கள், வைகாநஸம், பாஞ்சராத்ரம் என்ற ஆகமங்கள் தோன்றிக் கோயில் பூசை முறையை ஒழங்குப்படுத்தின. 36,37,38 என்ற பத்திகளில் கூறப் பெற்றவை தவிர ஏனைய பகுதிகள் வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் உபநிடதங்கள் என்ற நான்கிலும் கூறப்பெற்ற வளர்ச்சி முறையேயாகும். . வேதங்கள் நான்கு என்று கூறப் பெற்றாலும் ரிக் வேதம் தவிர ஏனையவை ரிக்கின் பல மந்திரங்களை அப்படியே எடுத்துக் கொண்டு மேலும் சில, பல மந்திரப் பகுதிகளைத் தம்முள் கொண்டுள் ளன. இவற்றில் காணப்பெறும் மந்திரப் பகுதிகள் ஸம்ஹிதை என்ற பெயரினுள் தொகுக்கப் பெற்றுள்ளன. பலர், பல இடங் களிலிருந்து பல்வேறு காலங்களில் செய்த மந்திரங்கள் ஆகலின் இவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டபொழுது பல பிரச்னைகள் தோன்றுவது இயல்புதான். சாம வேத ஸம்ஹிதைகள் ஸோமயாகத்தில் எவ்வாறு பாடப் பட வேண்டுமோ அந்த முறையில் தொகுக்கப்பெற்றுள்ளன. யஜூர் வேத ஸம்ஹிதைகள் பல்வேறு சமய யாகங்களில் எங்கெங்கே பயன்பட வேண்டுமோ அம்முறையில் தொகுக்கப் பெற்றன. இவற்றிற்கு மாறாக, ரிக் வேதத்தில், அந்த அந்த மந்திரங்கள் எந்தத் தெய்வத்தைப் பற்றி எழுந்தனவோ அவை எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பெற்றன. உதாரணமாக அக்னிபற்றி வருவனவெல்லாம் ஒன்றாகத் தொகுகப்பெற்றன. இவற்றை அடுத்துத் தோன்றிய பிராமணங்கள் வேறு இலக்கிய முறையைச் சேர்ந்தவை எனலாம். அவை உரைநடை