பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத கால ருத்ர சிவன் 41 ஒருவர்; அடுத்த பகுதியைப் பாடியவர் வேறு ஒருவர். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர் ஆவா. இக்காரணம் தவிர வேதம் பற்றி நீண்ட ஆய்வுகள் நடத்திய டாக்டர் கோண்டா, ஏ.ஏ. மாக்டானல் போன்ற வெளிநாட்ட வரும் ஆர். என். தண்டேகர் போன்ற நம் நாட்டாரும் ருத்ரன் சிவன் என்ற தெய்வம் பற்றிக் கூறும்பொழுது வேத குருமார்கள் ருத்ரனை ஏற்றுக் கொள்ள மறுத்த காரணம் பற்றி நீண்ட ஆய்வு கள் நடத்தியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி சிவன் தென்னாட்டுக் கடவுள் ஆவான். எனவே தம் பகைவர்களுடைய தெய்வமாகிய சிவனை வேத குருமார்கள் வெறுத்து ஒதுக்க முயன்றது நியாயமேயாகும். ஆனாலும் அவர்கள் ஒதுக்க முடியாதபடி சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இது பற்றி அடுத்துக் ó...fTgððf (gUfTlf). அடிக்குறிப்புக்கள் (இக்குறிப்பில் ரிக்வேதம் என்பதை அடுத்துக் காணப்பெறும் எண்களில் முதல் எண் மண்டலத்தின் எண்: இரண்டாவது பாடல் எண்: மூன்றாவது பாடலின் அடி எண்.) ரிக் வேதம் 1,114;1,5 ரிக் வேதம் 2,33,5 வாஜஸநேய ஸம்ஹிதை 16, 2-4 Vishnuism and Sivaism P. 3 வாஜஸநேய ஸம்ஹிதை 16, 18,28 Vishnuism and Sivaism P. 3 அதர்வண வேதம் 7,87,1 தைத்ரீய ஸம்ஹிதை 5,5,7,4 Vishnuism and Sivaism P. 4 ஸ்தபதப் பிராமணம் 12,7,3,20 10. ஸ்தபதப் பிராமணம் 1,7,3,1 11. ஸ்தபதப் பிராமணம் 1.7,4,9 12. ரிக் வேதம் 2,33,5 13. Vishnuism and Sivaism P. 4 14. ரிக் வேதம் 1,114,9