005 செய்தனர். வந்து குடியேறிய வைதிகர்களின் செல்வாக்கு ஓங்கி நின்றமையின் இத்தமிழகத்தின் தொல்பழஞ் சமயமாகிய சைவத் திற்கும், தமிழுக்கும் ஊறு விளைய ஏதுவாயிற்று. இனிப் புறச் சமயங்களாகிய சைனம், பெளத்தம் என்ப வற்றாலும் சைவத்திற்கு இடையூறு விளைந்தது. இந்த வைதிகர், சைனர்(களப்பிரர் மரபினர்), பெளத்தர் என்பார் அனைவரும் தமிழையும், தமிழ் நாகரிகத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஏற்காதவர்கள். தமிழைப் போற்றி வளர்த்த உள்நாட்டுத் தமிழ்ச் சமணர்கள் இவர்களிலும் வேறுபட்டவர்களாவர் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். சங்க காலத் தமிழர்களுள் கபிலர் போன்ற அந்தணர்களும் சைனர்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் தமிழர்கள். வந்தேறியவர்களாகிய களப்பிரர்(சைனர்), வைதிகர்கள் என்பவர்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றமையின் தமிழ் நாட்டில் தமிழரைத் தட்டி எழுப்பி இவர்களுடன் மோதவிட ஒருவர் தேவைப்பட்டார். இந் நாட்டுத் தொல் பழஞ் சைவம், வந்தேறிய வைதிகம் என்பவற்றிற்குப் பொது எதிரிகளாக இருந் தவர்கள் வந்தேறிகளான சைனரும் பெளத்தரும். இந்த நிலை யில் தோன்றியவர் திருஞானசம்பந்தர். புறச் சமய எதிரிகளை வெல்வதுடன் அகச்சமயமாகிய வைதிகத்தையும் எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலையில் அவர் தோன்றினார். இப் புரட்சி வீரர் வேதத்தை ஏற்றுக் கொள்ளும் இருக்கு வேதிகள் குடும்பத்தில் தோன்றினாலும் வேதத்தின் பெயரைக் கூறிக்கொண்டே அந்த வேதம் ஏற்காத விக்ரக வழிபாடு, அபிடேகம், அர்ச்சனை என்பவற்றை வலியுறுத்தினார். இப் புது முறை வழிபாட்டிற்கு வடமொழி இடந்தரா தாகலினாலும், இந்நாட்டின் அடிப்படைப் பண்பாட்டிற்குச் சிவ வழிபாடு தமிழ் மொழி முதலியவை கடைகால் ஆகையாலும், தமிழை உடன் சேர்த்துப் பேச வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. களப்பிரர் இடையீட்டுக் காலத்தில் மதிப்பிழந்த தமிழ் மொழி, பல்லவர் காலத்தின் முற்பகுதியிலும் கூடத் தன் பழைய நிலையை அடைய முடியவில்லை. அந்தக் காலகட்டங்களில் தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என்று கூட நினைக்க முடியவில்லை. - கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ம்ணிமேகலை, காரைக்கால் அம்மையின்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை