பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வேதத்தில் புகுந்த சிவன் தாண்டேகரின் வேதகாலத் தெய்வக் கதைகளின் போக்கு என்ற நூலிலிருந்து ருத்ர சிவன் பற்றிய கருத்துக்கள் வேதம் என்று கூறியவுடன் ஸம்ஹிதைகள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் என்ற நான்கு பிரிவுகளையும் சேர்த்துத்தான் எண்ண வேண்டும் என்று கூறுகிறவர்களும், ஸம்ஹிதைகளை மட்டுமே வேதம் என்ற சொல்லால் குறிக்கவேண்டும் என்று கூறியவர்களும் உண்டு. அதேபோல வேத காலம் என்றும், வேத காலச் செல்வாக்கு என்றும் கூறினவுடன், வேதங்களின் செல்வாக்கு எதிர்ப்பின்றிப் பாரத கண்டம் முழுவதும் பரவி இருந்தது போலும் என்று கருதுவதும் உண்மைக்குப் புறம்பானது ஆகும. இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேதம் பரவி நின்று செல்வாக்குப் பெற்றிருந்தது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் அப் பகுதியில் வாழ்ந்த அனைவரும் வேதங்களை ஒப்புக் கொண்டார்கள் என்றும் கூறுவதற்கில்லை. வேதங்கள் நான்கு தொகுப்பினுள் அடங்கும் என்றாலும், அனைவரும் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்கள் என்றும் உறுதியாகக் கூற முடியவில்லை. வேத வழிப்பட்ட ஆரியர்களுள் 350க்கும் மேற்பட்ட பிரிவுகள் இருந்தன என்றும், இப் பிரிவினர் ஒருவர் ஏற்பதை மற்றவர்கள் ஏற்காமல் இருந்துள்ளனர் என்றும் கூறப் படுகிறது. இந்தியாவின் மேற்றிசையில் வேதம் செழித்து வளர்ந்த அந்த நாளில் கீழ்ப் பகுதியில் வேதத்துக்கு மாறுபட்ட கொள்கைகள் மலிந்திருந்தன. நடுப்பகுதியிலும், தென் பகுதியி லும் என்ன இருந்தன என்று கூறத்தக்க சான்றுகள் அதிகம் இல்லை. 'வேதத் தெய்வக் கதைகளின் போக்கு ' என்ற நூலை எழுதிய ஆர். என். தாண்டேகர் என்பவர் வேதத் தெய்வங்கள் பற்றி விரிவாக ஆய்ந்து அந்த நூலை எழுதியுள்ளார். அதில்