பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதத்தில் புகுந்த சிவன் 49 ருத்ரன் பற்றிய எந்தக் கொள்கையையும் ஆதாரத்துடன் கூறமுடியாதநிலை 'வேத குருமார்கள் ருத்ரனை அக்னியுடன் தொடர்புப்படுத்திப் பேசியது" ஒர் உபசார வழக்கேயாகும். இதே பாடலில் இன்னும் பல தெய்வங்களையும் அக்னியுடன் தொடர்புப்படுத்திப் பேசியுள் ளனர். எனவே இது அர்த்தமற்ற மரபு வழிப்பட்டது. அவர்கள் வழிபடும் பிற தெய்வங்களுடன் சேர்த்து ருத்ரனையும் ஏற்றுக் கொண்டிருந்தால் தம் கிரியைகளில், ஹோமங்களில் அவனை ஏன் ஒதுக்கவேண்டும்? ருத்ரனை அக்னியுடன் தொடர்புபடுத்தி யது உண்மை என்றால் அவனைக் கொள்ளைக்காரன், திருடர் தலைவன் என்றெல்லாம் பேசவேண்டிய தேவை இல்லை. ருத்ரனின் தோற்றம், பண்பு என்பவை வேதக்காரர்கள் ஏற்க முடியாதவையாக இருந்தன என்பது உண்மை. என்றாலும் அவர்களைச் சுற்றி இருந்தவர்களிடம் அவன் செல்வாக்கு மிக்கிருந்தமையின் அவனுக்கு இடம் கொடாமல் வெருட்டி விடவும் முடியவில்லை. வேத காலத்தில் குருமார்களின் சடங்கு களில் அக்னி இடம் பெற்றிருந்தது போல மக்களிடையேயும் செவி வழிக் கதைகளிலும் ருத்ரன் இடம் பெற்றிருந்தான் (224). வேத காலக் குருமார்கள் ருத்ரசிவனை ஒதுக்க முயன்றமை; வேறுவழியின்றி இடம் கொடுத்தமை 'ருத்ரனைப்பற்றிய எந்த ஒரு கொள்கையும் ஆதாரங்களுடன் நிரூபிக்கக் கூடிய முறையில் அமையவில்லை என்பது உண்மை. ஆயினும் அவனுடைய வளர்ச்சி விலக்கமுடியாத ஒன்றாக உள்ளது. வேதகாலக் குருமார்கள் ஒதுக்க முயன்று முடியாமை யால் வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடனும் சந்தேகத்துட னும் தம்முள் நுழைய விட்ட ருத்ரன், பிற்கால இந்து சமயத்தில் மிக வலுப் பெற்றுவிட்டான். சமயக் கருத்துக்கள் தத்துவங்கள் என்பவற்றில் அவன் ஊடுருவி வளர்ந்து விட்டான் (227). வேத காலத்துக்கும் முற்பட்ட காலத்தில் மக்களின் வழிபடு தெய்வமாக சிவன் இருந்த நிலை - 'அர்ப்மன் (ARBMAN) என்ற மேனாட்டு அறிஞர் ருத்ரன் பற்றி ஆய்ந்து மிகப் பழைய காலத்தில் அதாவது வேத காலத் துக்கும் முற்பட்ட காலத்தில் ருத்ரன் மக்களுடைய வழிபடு தெய்வமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார். இந்த இரண்டு