50 பெரியபுராணம் ஒர் ஆய்வு ருத்ரர்களுள், வேதத்துப் பிற்கால மரபில் பேசப்படும் ருத்ரன், ரிக் வேதத்தில் பேசப்படும் ருத்ரனினும் வேறானவன். வேதத் தின் பிற்காலத்தில் பேசப்படும் ருத்ரனே மிகப்பழைய வேதகாலத் துக்கு முற்பட்ட மக்களின் வழிபாட்டில் இடம் பெற்றிருந்த ருத்ர னுடன் நெருங்கியவனாவான். அந்தத் தொல் பழங்கால ருத்ரன், வேத பிற்கால ருத்ரன் என்பவர்களை நோக்கும் பொழுது ருத்ரன் பற்றிய கருத்து தொன்றுதொட்டு இடையீடு இல்லாமல் இருந்து வருகின்ற ஒன்று என்பதையும் அறிய முடிகிறது. ரிக் வேதத்தில் காணப் பெறும் ருத்ரனைத்தான் இடைப் பிறவர லாக அப் பழைய ருத்ர வளர்ச்சியின் நடுவே தோன்றிய ஒன்றாகக் கருத வேண்டும். வேத காலத்தில் காணப்படும் ருத்ரன் இறப் பிற்குக் காரணமான தெய்வமாகக் கருதப்பெற்றான். (233). 'ருத்ரன் சிவப்பு நிறமுடையவன் என்றே வேதங்கள் பேசின. சாவுக்குத் தெய்வம் என்ற முறையில் அவனுடைய நிறம் சிவப்பு என்று வேதக்காரர்கள் கூறி இருக்கலாம். இந்த நிலையில் சிவன் பற்றிய கருத்துக்களையும் மனத்துட் கொள்ள வேண்டும். சிவனும் சிவப்பு நிறமுடையவன்; இடுகாட்டில் உறைபவன்; எலும்பு மாலை அணிபவன். அந்தச் சிவனுக்கும் பாம்புகட்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. இவற்றை எல்லாம் நோக்கும் பொழுது சிவன் ருத்ரனின் இரட்டையாவான் என்று கருதுவதில் தவறு இல்லை. ஒருவனுக்குக் கூறப் பெற்ற அனைத் தையும் மற்றொருவனுக்கு ஏற்றிக் காட்டுவது எளிதாகிவிட்டது (239). 'வேத குருமார்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ருத்ர னுக்கு, இடங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் அச்சத்தை விளைவிப்பவன், சாவுக்குத் தெய்வம் என்றெல்லாம் அவன் பண்பு அமைவதாக வலியுறுத்தினர். ருத்ரன் வட திசைக்கு உரி யவன் என்று கூறிய வேதம், சாவுக்குரிய தெய்வம் தெற்குத் திசை யிலிருப்பது என்றுங் கூறிற்று. மேலும் ருத்ரனுக்கு அவிஷ் இடும் பொழுது ஸ்வாகா என்று சொல்லி இடுகிறார்களே தவிர 'ஸ்வதா என்று கூறுவதில்லை. சாவின் தெய்வமாகவும் தென் திசைக்குரியவனாகவும் பிதிர்களில் ஒருவனாகவும் அவன் கருதப் பெற்றிருந்தால் ஸ்வதா என்று தானே அவிஷ் சொரிய வேண்டும்? என்றாலும் வேதத்துப் பிற்காலத்தில் தொல் பழங் கால ருத்ரனே மீதுார்ந்து சிவனுடன் கலந்து ருத்ர-சிவனாக ஆகி 'மகாதேவன்' என்ற பெயரையும் பெறும் நிலை தோன்றி விட்டது(243).
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/78
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை