52 பெரியபுராணம் - ஒர் ஆய்வு ஒருத்தி மட்டுமே மரியாதைக்குரிய இடத்தைப் பெறுகிறாள். பிற பெண்கள் கணவனின் மனைவியராய் வருகின்றனரேயன்றித் தமக்கென ஒர் தனி இடம் உடையராய் வரவில்லை. ருத்ராணி என வரும் தெய்வமும், அதிதி என்ற தெய்வமும் வேதக்காரர்கள் தம் குழுவுக்கு அப்பால் இருந்தவர்களிடமிருந்து கடனாகப் பெற்றவர்களேயாவர். பூஜா என்ற சொல் பிறந்த கதை பூஜா என்ற சொல் நன்கு ஆராயப்படவேண்டிய ஒன்றாம். ா என்ற பெயர்ச் சொல்லோ அல்லது பூஜயதி என்ற வினைச் சால்லோ ரிக் வேதத்திலோ அல்லது அக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பிற பிராமணங்கள் முதலியவற்றிலோ இடம் பெறவே இல்லை. இதனால் பூஜா என்ற சொல் பழங்கால இந்திய மொழி யிலிருந்து வேத அங்கங்கள் தோன்றிய காலத்தில் கடனாகப் பெற்றிருக்க வேண்டும். யாஸ்கர் காலத்தில் இச் சொல் இடம் பெற்றுவிட்டது. இந்தோ ஐரோப்பிய மொழிகளிலோ ஸ்மஸ்கிருதத்திலோ இதற்கு வேர்ச் சொல் காண மேற்கொண்ட முயற்சிகள் யாவும் வெற்றி பெறவில்லை. ' குண்டர்ட், கிட்டல்' என்ற இரண்டு மொழிநூல் வல்லவர்களும் பூசு என்று தமிழிலும் பூஜா என்று கன்னடத்திலும் உள்ள சொல்தான் பூஜை எனக் கூறுவர். 'பூசு என்பது வண்ணம் பூசுதல், அப்புதல், என்ற பொருளைத் தரும் சொல்லாகும். பூஜையில் விக்ரகத்திற்குப் பூசுதல் முக்கியமான ஒன்று. தொல் பழங்காலத்தில் விக்ரகம் என்ற அடையாளப் பொருளை, பலியிட்ட விலங்கின் இரத்தத் தால் பூசினர். ஆகலின் இதிலிருந்தே அச் சொல் வந்திருக்க வேண்டும்(249). 'ஒரு காலகட்டத்தில் வேத வழக்கங்களும், வாழ்க்கை முறை களும் முற்றிலும் அழிந்து மறைந்துவிடுமோ என அஞ்சப்பட்ட நிலையில் அவர்களைச் சுற்றி இருந்த வேத மல்லாத சமய வழக்கங்கள் கொள்கைகள் என்பவற்றைத் தம்முடன் சேர்த்துக் கொண்டு தம் வேத வழக்கங்களை நிலைநிறுத்த முயன்ற முயற்சியின் பயன்தான் இது. விக்ரகத்தையும் பூஜையையும் கனவிலுங் கருதாத வேத வழக்கொடுபட்ட சமயம் இவ்விரண்டி லும் ஒரளவு மாறுதல்களைச் செய்து தன்னுள் பெய்து கொண்டது. யாஸ்கரும் பாணினியும் பூஜை, விக்ரகம் என்ற சொற்களைக் காட்டவேண்டிய சூழ்நிலை வேதாங்க காலத்திலேயே தொடங்கி விட்டது(250). - -
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை