54 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அறிய முடிகிறது. யோகம் போன்ற முறைகளை வேத வழக்கொடு பட்ட சமயம் விரும்பி ஏற்கவில்லை(259-260). 'விராத்ய, பிரம்மச்சாரி, முனி வழிபாட்டு மரபினர் அக்னியை முதன்மையாக வைத்துச் செய்யப்படும் வேதக் கிரியைகளை நம்ப வில்லை, ஏற்கவுமில்லை என்றும் தெரிகிறது. இதன் எதிராக யோக வழியை மேற்கொண்ட அவர்கள் வியக்கத் தகுந்த ஆற்றலைப் பெற்றதுடன் சமயஉணர்வு முருகுவதால் ஏற்படும் இன்பத்தையும் பெறலாயினர். சமுதாயக் கூட்டத்திலிருந்து தனித்து வாழ்வதே தங்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் கருதினர். அதர்வணத்தில் அவர்களைப் பற்றிக் கூறப்பெற்றுள்ள குறிப்புக் களிலிருந்து துறவு, கடிய விரதம், ஒரிடத்தில் தங்காமல் சுற்றுதல் என்ற பழக்கங்களை அவர்கள் விரும்பி ஏற்றனர் என்றும் அறிகிறோம். வேதகாலத்தில் இவர்களுடைய ருத்ரனை எடுத்துக் கொண்டார்களே தவிர இவர்களுடைய தவம் துறவு என்பவற்றை ஆரியர்கள் மேற்கொள்ள விரும்பவில்லை. என்றாலும் இந்த மூன்று வழிபாட்டு மரபினரின் பழக்கங்களின் தாக்கம் மிக மிக வலுவுடையதாக இருந்திருக்கிறது என்று அறிகிறோம். அதன் பயனாக உபநிடத காலத்தில் வானப்பிரஸ்தம் முதலிய ஆஸ்ரமங்கள், எளிய வாழ்வு, துறவு என்பவற்றை மேற் கொள்ள நேர்ந்தது. தொல் பழங்கால இந்தியச் சிவனும் புராண காலச் சிவனும் விடாமல் தொடர்ந்த சங்கிலித் தொடரின் இரு முனைகளாவர்(261-26 2). லிங்கம் என்ற பெயரைக் கூறாத காரணம் சிவ வழிபாட்டின் அடிப்படையைத் தவறாகப் புரிந்து கொண்டதனாலோ அன்றிச் சிந்துவெளி நாகரிகத்தில் காணப் பெறும் லிங்கங்கள் ஆண் குறியின் அடையாளம் என்று கருதிய அதனாலோ வேதக்காரர்கள் ருத்ர சிவனைச் சொல்லும் பொழுது இந்த லிங்கத்தைக் கூறாமல் மறைத்துவிட்டனர். சிவ வழிபாடு செய்கின்ற ஒரு கட்டத்தார் ஆரியர்களின் அக்னி ஹோம முறையை ஏற்றுக்கொள்ளாமையால் இவ்விரு திறத்தாருக்கும் நீண்ட பகைமை இருந்து வந்திருக்க வேண்டும். இலிங்க வழி பாட்டைச் சிவவழிபாடு என்று ஏற்றுக்கொள்ளாத ஆரியர்கள், இலிங்க வழிபாடு செய்கின்ற கூட்டத்தாரைச் சிஸ்ன்தேவனை வழிபடுகின்றவர்கள் என்று கூறினர். ரிக் வேதத்தில் வரும் இரண்டு பாடல்கள்' இவர்களை சிஸ்ணதேவர் என்று கூறி இந்திரனை அழைத்து இவர்களை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றன. (தமிழர்களைப் பொறுத்த மட்டில் இது தரையில்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை