வேதத்தில் புகுந்த சிவன் 57 இந்தக் குருமார்கள் செய்த முயற்சிகளை ஒதுக்கி விட்டுக் கண்டால் தொல் பழஞ் சிவ வழிபாடு எங்கும் தடைப்படாமல் வேதத்திலும் நுழைந்து புராண சிவமாக வரும்வரை சங்கிலித் தொடர்போல அமைந்து விளங்கக் காணலாம். சிவ வழிபாடு இந்தியாவில் மட்டுமில்லாமல் யாண்டும் பரவி இருப்பதால் மிக மிக நீண்ட காலமாக உலகிடைப் பரவியுள்ளதும் இன்றும் வாழ்வதும் ஆன ஒரே சமயம் சிவ வழிபாடு ஒன்று தான் என்பது விளங்கும்(275-277). மிக நீண்டு சென்றாலும் இப்பகுதி நம் ஆராய்ச்சிக்கு மிகமிக இன்றியமையாதது ஆகும். வேதங்களும், வேள்விகளும் சங்கப் பாடல்களிலும், தேவாரங்களிலும் இடம் பெற்றுள்ளனவே? அப்படி இருக்கச் சிவபெருமானை முதல்வனாகப் போற்றாமல் இந்திரன், அக்னி முதலியவர்களையே போற்றி வேள்வி செய்யும் வேதங்களை இத் தமிழரும், நாயன்மார்களும் எவ்வாறு போற்றினர் என்ற வினா மிகக் கடுமையான ஒன்றாகும். அதிகாரம் 2,3 என்பவற்றிலிருந்து வேதத்தை மீறிச் சிவ வழிபாடு எவ்வாறு எங்கும் பரவி இருந்தது என்பதை அறிய முடிகிறது. இனி அடுத்துச் சங்க காலம், அதனை அடுத்துத் தேவார காலம் என்பவற்றுள் சிவ பெருமானைப் பார்ப்பது இந்த வளர்ச்சிமுறை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிய உதவும். அடிக்குறிப்புக்கள் Vedic Mythological Tracts ரிக் வேதம் 10,136 ரிக் வேதம் 10,132 ரிக் வேதம் 11, 5 ரிக் வேதம் 11,5,4,8,9 ரிக் வேதம் 11,5, 2 Vratya Cult பஞ்ச விம்ஸ்ப் பிராமணம் 17 ,1,4 EKA. VRATYA அதர்வண வேதம் 15,3,1 அதர்வண வேதம் 15,3,1
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை