பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சங்கத் தமிழர் கண்ட சிவபெருமான் தொல்காப்பியனார் கூறும் தெய்வம், கட்வுள் என்ற சொற்களுள் பொருள் வேறுபாடு சங்கப் பாடல்களுள் முருகன், திரும்ால், காடுகாள் (பழையோள்-துர்க்கை) என்ற கடவுளர்கள் பேசப்பெறுவதுடன் ஆலமர் செல்வன் என்ற பெயரில் சிவபிரான் பேசப்பெறுகிறான். ஆனால் நிலப் பகுப்பில் தெய்வங்களைத் தொடர்புபடுத்திப் பேசிய தொல்காப்பியனார் சேயோன், மாயோன் என்ற இரு தெய்வங்களைக் குறிப்பிடுகிறாரே தவிரச் சிவபிரான் பற்றிய குறிப்பைத் தரவில்லை. தொல்காப்பியனார் நிலப் பிரிவினை யில் தொடர்புபடுத்தும் தெய்வங்கள் நான்கு ஆகும். அவருள் மாயோனும், சேயோனும் பின்னர் வந்த சங்க இலக்கியங்களுள் பேசப் பெறுகின்றனர். ஆனால் தொல்காப்பியனர் கூறிய ஏனைய இரு தெய்வங்களாகிய வேந்தன் (இந்திரன்) வருணன் என்ற இருவரும் சங்க இலக்கியத்தில் தெய்வங்களாகப் பேசப் பெறவே இல்லை. இந்த நிலையில் தொல்காப்பியனார் மிகுதியாக வழங்காத கடவுள் என்ற சொல் சங்க இலக்கியத்துள் மிகுதியாகப் பயின்று வருவதைக் காணமுடிகிறது. தொல்காப்பியரைப் பொறுத்த வரைத் தெய்வம், கடவுள் என்ற இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு காண்கின்றாரோ என்பதும் ஆயத்தக்கது. 'தெய்வம் அஞ்சல்' 'தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும் 'தெய்வம் உண்ாவே'...... என்பன போன்ற சூத்திரங்களுள் கூறப்படும் தெய்வம் ஒரு நிலத்து மக்கள் போற்றி வழிபடும் சிறு தெய்வங் களையே குறிக்கின்றன என்று கருதுவதில் தவறில்லை என்றும் தோன்றுகிறது. இதன் எதிராக, காமப் பகுதி கடவுளும் வரையார்' என்ற இடத்திலும் 'கொடிநிலை, கந்தழி வள்ளி என்ற.... கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே " என்ற இடத்திலும் கூறப்படும் கடவுள் என்ற சொல் தொல்காப்பியனார் முன்னர்க் கூறிய தெய்வம் என்ற சொல்லினால் குறிக்கப்பட்ட