சங்கத் தமிழர் கண்ட சிவபெருமான் 6 I 2.3 24 25 18 'கடவுட் பழிச்சல்' 19 'கடவுள் மால்வரை' 20 'காரி உண்டிக் கடவுள்' என்பவை சிலவாகும். மலையுறை கடவுள் என்பது முருகனையா? இந்த மேற்கோள்களை ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது இப் புலவர் பெருமக்கள் கடவுள் என்ற பெயரில் யாரைக் குறிப்பிடு கின்றனர் என்ற வினா எழுவது இயற்கையேயாம். மலையுறை கடவுள்' என்றும் குன்றக் குறவன் கடவுட் பேணி என்றும் 'பிறங்கு மலை மீமிசைக் கடவுள்' என்றும் வரும் பகுதிகள் மலை மேல் உறையும் கடவுள் என்று கடவுளுக்கு ஒர் அடையாளம் கூறுகின்றன. இவற்றுள்ளும் முன்னர்க் காட்டப் பெற்ற இரண்டு மேற்கோள்களும் ஐங்குறு நூற்றில் குறிஞ்சியில் வருவதால் மட்டும் இக் கடவுளை முருகன் அல்லது வேலன் என்று கூறிவிட முடியாது. மூன்றாவது மேற்கோள் குறிஞ்சிப்பாட்டில் வருவதால் அவ்வாறு பொருள் கூறுவது சரி போலத் தோன்றும். ஆனால் 'காடுறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை ' 'கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை' என வரும் பகுதிகள் முருகன் என்று பொருள் கூறமுடியாத பகுதிகளாம். மேலும் முருகனைப் புலவன் குறிப்பதாக இருப்பின் முருகன் அல்லது செவ்வேள் அல்லது வேலன் என்று குறிப்பிட்டிருப்பான். இவ்வாறு கூறவில்லை எனில் கடவுள் என்ற சொல்லுக்கு முன்னர், முருகன் என்ற பொருளைத் தரும் அடைமொழி எதையாவது சேர்த்தே கூறுவான். 'மன்ற மரா அத்த பேமுதிர் கடவுள்' என்றும் 'நல்லரை மராஅத்த கடவுள் " என்றும் வரும் பகுதிகள் இக் கருத்தை வலியுறுத்தும். எனவே மேலே காட்டப்பெற்றுள்ள மேற்கோள்களில் அடையடுத்து வராமல் கடவுள் என்று மட்டும் வருமேயாயின் அது யாரைக் குறிக்கும் என்பதைச் சிந்திப்பதில் தவறு இல்லை. இரண்டு மூன்று மேற்கோள்கள் நாம் ஒரு முடிவுக்கு வரப்பெரிதும் உதவுகின்றன. 13வதாக உள்ள பதிற்றுப்பத்து மேற்கோள் 'கடவுள் உறைகின்ற இமயம்' என்று கூறுகிறது. 16வதாக உள்ள புறப்பாடல் 'எருக்கம் பூச்சூடும் கடவுள்' என்று கூறுகிறது. 20வதாக உள்ள மலை படுகடாத்தின் அடி 'அக் கடவுள் விடத்தை (காரி)
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை