பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 62 பெரியபுராணம்- ஓர் ஆய்வு உணவாக உண்டான்' என்று கூறுகிறது. எனவே இம் மூன்று மேற்கோள்களையும் வைத்துக் கொண்டு சங்கப் பாடல்களில் அடை அடுத்து வாராமல் 'கடவுள் என்று வருமேயானால் அது சிவபெருமானையே குறிக்கும் என்று கொள்வதில் தவறு இல்லை என்று தோன்றுகிறது. இனிச் சிவபிரானைப் பற்றி நேரிடையாக வரும் குறிப்புக் களைக் காண்டல் வேண்டும். 'நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன்' " 'ஒங்குமலைப் பெருவிற் பாம்பு நாண் கொளிஇ ஒருகனை கொண்டு மூவெயி லுடற்றிப் பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கு மொருகண் போல ' இப்பாடல் மருதன் இளநாகனார் என்பவரால் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப்பற்றிப் பாடப் பெற்றதாகும். இப்புலவர் சங்க இலக்கியத் தொகுப்பினுள் 79 பாடல்களைப் பாடியுள்ளார். 5 புறப்பாடல்கள் தவிர எஞ்சிய எல்லாம் அகப் பாடல்களேயாகும். எனவே இவர் பழமை யானவர் என்பதற்கு ஐயமில்லை. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்பவற்றுள் உள்ளவை போக மருதக் கலியும் இவருடையதே என அறிஞர் கூறுகின்றனர். இப்புலவர் பெருமான் சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றை விரிவாகக் கூறியதுடன், அவன் கறைமிடற்று அண்ணல் என்றும், மூன்றாவது கண்ணை நெற்றியில் உடையான் என்றும், பிறை அணிந்தவன் என்றும் கூறுகிறார். இவ்வளவு விரிவாகச் சிவபெருமானைப்பற்றிக் கூறும் மற்றொரு பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாகும். ஆனால் கடவுள் வாழ்த்துக்களைப் பாடி இந்நூல்கள் அனைத்திலும் சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பதனாலும், இவை தொகுக்கப் பெற்ற பின்னரே அவர் கடவுள் வாழ்த்துப் பாடி இருப்பார் ஆகலானும் இத் தொகுப்புக்கட்குக் காலத்தால் பிந்தியவர் என்பதனாலும் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. இனி அவ்வையார் பாடியுள்ள புறப் பாடலில் 'பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணி மிடற் றொருவன் போல "... என்று கூறுகிறார்.