பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெரியபுராணம்- ஓர் ஆய்வு மதுரைக் காஞ்சி பேசும் தத்துவக் கருத்து இங்குக் கூறப்பெற்ற செய்திகள் அனைத்தும் சிவபெருமான் உருவ அமைப்பைக் கூறுவதுடன் அவன் திரிபுரம் எரித்தவன் என்ற ஒரே ஒரு செய்தியை மட்டுமே அறிவிக்கின்றன. மதுரைக் காஞ்சி என்ற நெடும் பாடலில் முதன் முறையாகத் தத்துவக் கருத்து ஒன்று பேசப்படுகிறது. 'நீரும் நிலனும், தீயும்,வளியும் மாக விசும்பொ டைந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக... என்ற பகுதி புதிய கருத்தைக் கூறுகிறது.

  • 37

அம்பலம், பொதியில்-கோயிலைக் குறிக்கும் பெயர்கள் இனி இச் சிவபெருமானுக்கு இத்துணை விரிவாக வடிவ அமைப்புக் கூறியுள்ளமையின் சங்க காலத்தில் இப் பெருமானுக் குப் படிவம் அமைந்திருந்தது எனினும் அதில் வியப்படைய ஒன்றும் இல்லை. இதனை அல்லாமல் தறி ஒன்றை நட்டு வழிபடும் பழக்கமும் இருந்ததாகத் தெரிகிறது. இதனைக் 'கந்து என்று வழங்கினர் அக்காலத்தார். ஊரின் நடுவிடமாகிய மன்றம் என்று கூறப்பெற்ற அம்பலத்தில் இவ்வாறு நடுதறிக் கோயில் ஆங்காங்கே அமைக்கப்பெற்றிருந்தன என்பதையும், அந்த அம்பலங்களில் மாலை நேரங்களில் மகளிர் நீராடித் துய்மை யுடன் சென்று மெழுகி, அணையாத விளக்கை ஏற்றி மலர் சூட்டி வழிப்பட்டனர் என்றும் அந்த அம்பலங்களில் பலரும் சென்று வழிபட்டனர் என்றும் பட்டினப்பாலையால் அறிய முடிகிறது. 'கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்க மேறிப் பலர் தொழ வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் ' இவ்வாறு தறி நட்டு அவ்விடங்களைக் கோயிலாக வழிபட்ட புதுமை இத் தமிழரிடத்து இருந்தமையை அறிவதுடன் இது பற்றிப் பயன்படுத்தப் பெற்ற சொற்களையும் கூர்ந்து நோக்கல் வேண்டும். இவ்விடங்கள் பொதியில் என்றும் அம்பலம் என்றும் வழங்கப் பெற்றன. இவ்விடங்களில் கடவுளை உருவ வழிபாடு செய்தனர். சிவபெருமானை முன்னர்க் காட்டப்பெற்ற முறையில் இத்துணை நுணுக்கமான வகையில் படம் எழுதிக் காட்டிய இவர்கள் இந்த