சங்கத் தமிழர் கண்ட சிவபெருமான் 6 5 அம்பலங்களில் தறியை நட்டு ஏன் வழிபட வேண்டும்? படமெழுதி இவர்கள் வழிபட்டனர் என்பதையும் சில பாடல்களால் அறிய முடிகிறது. . கோயில் அமைப்பு முறை 1 'புற்றுடைச் சுவர புதலிவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து ' 2 'மரையேறு சொரிந்த மாத்தாள் கந்தின் சுரையிவர் பொதியில் அங்குடிச் சீறுளர் நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை" 3 'முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரிநோங்கு சிறுபுற முரிஞ வொல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து எழுதணி கடவுள் போகலின் புல்லென்று ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை' அகநானூற்றில் வரும் இந்த மூன்று பாடல்களும் அந்த நாளையத் தமிழர்கள் கோயில் அமைத்த முறை, கடவுளை. அமைத்த முறை, வழிபட்ட முறை என்பவற்றைப் போகிற போக்கில் அறிவித்துச் செல்கின்றன. முதலாவது மேற்கோள் மதுரையில் வாழ்ந்த ஈழநாட்டுப் புலவராகிய பூதன்தேவன் என்பவரின் பாடலாகும். பொதியில் என்றதால் கோயில் அமைந்த இடம் என்பதையும், 'கருத்தாள் கந்து' என்றமையின் நடுதறியாக அமைக்கப்பெற்ற கடவுட் படிமத்தின் அடிப்பகுதி பருத்தும் நுனிப்பகுதி சிறுத்தும் இருந்தது என்பதையும், கோயிலில் வழிபாடு நின்று போனமையின் அதில் கடவுள் உறையவில்லை என இவர்கள் கருதினர் என்பதையும் அறிய முடிகிறது. இப் புலவர் ஈழ நாட்டுடனும் தொடர்புடையவராக இருத்தலின் இவர் கூறியுள்ள செய்திகள் தமிழகம், ஈழம் என்ற இரு பகுதிகட் கும் பொருந்துவதாகும். 41 இரண்டவதாகக் காட்டப்பெற்றுள்ள மேற்கோள் முதலிற் கூறியதையே வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன் புதிய செய்தி ஒன்றையும் தெரிவிக்கின்றது. 'மாத்தாள் கந்து' என்று இப்பாடலிலும் கூறுவது நோக்கத்தக்கது. 'பொதியில் என்ற சொல்லும் அப்படியே ஆளப்படுகின்றது. மூன்றாவது வரியில் உள்ள 'நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை என்பது கோயில்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/93
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை