பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கத் தமிழர் கண்ட சிவபெருமான் Ꮾ Ꮽ கரிகாலனைப் பாடும் பட்டினப்பாலை அவன் உறையூரின் கண் கோயில்களையும் குடிகளையும் முன்னர் இருந்தது போலச் செப்பஞ் செய்தான் என்ற தகவலை கோயிலொடு குடிநிறீஇ' " என்று பேசுகிறது. முன்னர்க் காட்டப்பெற்ற உதிரிப் பாடல்களில் கண்ட குறிப்புக்கள் போக நெடும் பாடல்களிலும் சிவபிரான், அவன் உறையுங் கோயில், அதில் நடைபெறும் விழாக்கள் என்பவை பற்றிச் சங்கப்பாடல்கள் கூறிச் செல்வதை இங்கே காணுகிறோம். சங்க நூல்களுள் பிற்பட்டது என்று கருதப்பெறும் கலித்தொகை, 'அடங்காதார் மிடல் சாய அமரர்வந்து இரத்தலின் மடங்கல் போல் சினைஇ மாயம் செய்து அவுனரை கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம்போல..... 9. என்று திரிபுரதகனம் பற்றிப் பேசுகிறது. இதுவரை காட்டிய மேற்கோள்களில் காணப்பெறும் கடவுள் என்ற சொல்லுக்குச் சிவபிரான் என்று பொருள் கொள் வதில் தவறில்லை என்றே தோன்றுகிறுது. இத்துணை அளவு பேசப்பெறும் சிவபிரானைத் தொல்காப்பியனார் ஏன் குறிப்பிட வில்லை? என்ற வினாவை இந்நிலையில் எழுப்பிக்கொண்டு சிந்திப்பது பயனுடையதாகும். தொல்காப்பியனார் நிலப்பிரிவினையில் கூறும் தெய்வப் பெயர்கள் - தெய்வம் என்ற சொல்லும் கடவுள் என்ற சொல்லும் தொல்காப்பியனாரால் பயன்படுத்தப் பெற்றுள்ளன. நிலப் பிரிவினை கூறும் அகத்திணை இயல் 5ஆம் சூத்திரம், "மாயோன் மேய காடுறை உலகம் சேயோன் மேய மைவரை உலகம் வேந்தன் மேய தீம்புனல் உலகம் வருணன் மேய பெருமணல் உலகம்' - என்று கூறிச்செல்கிறதே தவிர இங்குக் கூறப் பெற்றவர்களைத் தெய்வம் என்றோ கடவுள் என்றோ குறிப்பிடவில்லை. இனிக் கருப்பொருள் கூறுகையில்,