பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கத் தமிழர் கண்ட சிவபெருமான் 7 1 சிவனைக் குறிக்காத காரணம் தமிழர் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் தொல்காப்பியத்துள் முழுமுதற் பொருளைப் பற்றிக் கூறாமல் இருக்கவும் முடியாது. தனித் தனித் திணைகள், அத்திணை நிகழிடமாகிய முதற் பொருள் என்பவைப்பற்றிப் பேசுகையில் அவ்வவற்றிற்குரிய தெய்வங்களை மட்டும் பேசிய ஆசிரியர் புறத்திணை இயலில் பாடாண் திணைபற்றிக் கூறுகையில் கடவுள் வாழ்த்துப் பற்றிக் கூறும்பொழுது, முழு முதற் பொருளின் இலக்கணம் முழுதும் அமையுமாறு ஒரு சொல்லைப் பெய்து பாடுகிறார். 'கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே ' இந்நூற்பாவில் கந்தழி என்ற சொல்லால் இறைப்பொருளைக் குறிக்கின்றார். இந் நூற்பாவிற்குப் பலரும் பலவிதமாக உரை செய்திருப்பினும் 'கந்தழி' என்ற சொல்லைப் பொருத்தமட்டில் 'பற்றுக் கோடில்லாதது' என்ற பொருளை அனைவரும் ஏற்கின்ற னர். மூலப்பொருளுக்குக் கந்தழி எனப் பெயர் தரும் தொல் காப்பியனார் இதனைக் குறிக்காத ஏனைய இடங்களில் தெய்வம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதே முறையாம். கடந்து நிற்பது என்று பொருள்படும் சொல்லையும் கந்தழி என்ற பொருளில் வழங்குகிறார் என்பதும் முன்னர்க் காட்டப்பெற்றது. சிவன் என்ற பெயரைச் சங்கப் பாடலும் தொல்காப்பியரும். பயன்படுத் தாமைக்குக் காரணம் அச் சொல் அன்று இல்லாமல் இருக்கலாம் என்பதேயாகும். சிவன் என்ற சொல்லுக்குச் சிவந்த நிறமுடை யவன் என்ற பொருளும் உண்டு. மேலும் அவன் மலையில் உறைபவன் என்ற கருத்தும் இந்நாட்டிற் பரவி இருந்ததைப் பாடல்கள் மூலம் அறியலாம். பிறங்கு மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி' 'கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயம் ' என்ற இவற்றை எல்லாம் நோக்கும் பொழுது சேயோன் என்ற பெயரேகூட ஒரு காலத்தில் சிவனைக் குறித்திருக் கலாமோ என்று எண்ணுவதில் தவறு இல்லை. வேதத்தில் காணப்பெறாத முருகன் வழிபாடும், வேத காலத்தின் பிற்பகுதி யில் அதனுட் புகுந்த விஷ்ணு வழிபாடும் தமிழகத்தில் வலுப்பெற்று வளர்ந்ததை அறிகின்றோம். அதே நேரத்தில் ருத்ர சிவனாகப் பின்னர்ப் புகுந்த சிவ வழிபாடும் இத் தமிழகத்தில் புகுந்த ஒன்றா அல்லது சிவ வழிபாடு இத் தமிழகத்தின் தான்மையான வழக்கமா என்பதைச் சென்ற 3ஆம் அதிகாரத்