பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண மூலங்கள் 44 I. துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச்சமணர் தாங்கள் முன்னமே பிள்ளையார்பால் அனுசிதம் முற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற, புகலியில் வந்த ஞானபுங்கவர் அதனைக் கேட்டும் இகலிலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாதிருந்த வேளை, நண்புடை ஞானம் உண்டார் மடத்துத்தீ நாடி இட்ட எண் பெருங் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் : என்ற இப்பாடல்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. இத்தகைய நிகழ்ச்சி தமிழ்நாட்டில் எங்கும் நடைபெற்ற தாகத் தெரியவில்லை. என்றாலும் கருநாடகத்தில் உள்ள அபலூர்க் கோயில் கல்வெட்டுக்களும் சிற்பங்களும் இத்தகைய நிகழ்ச்சிகள் அங்குச் சகஜமாக நடைபெற்றன என்பதை விளக்கு தலின் சேக்கிழார் துணிந்து அவற்றைத் தமிழ் நாட்டில் நடை பெற்றதாக ஏற்றிப் பாடுகிறார். அப்படிப் பாடும் அதே நேரத்தில் தம் நாட்டு மன்னனையும், தாம் பாட வந்த பெரியாரையும் இக்குற்றம் சாராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் இருந்ததாக அறிய முடிகிறது. அரசனைப் பொறுத்த வரை நீதியை நிலைநாட்ட முற்படும்பொழுது விருப்பு, வெறுப்பு, பச்சாதாபம் என்பவற்றிற்கு அங்கு இடம் இல்லை. அவனுடைய நாட்டில் அவன் தலைநகளில் பிறர் வாழிடத்தில் தீயிடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. எனவே அவர்களைத் தண்டிக்க வேண்டிய கடமை அவனுடையதாகிறது. இது போதாமல் அவர்கள் பந்தயமும் கட்டி அதிலும் தோற்றுள்ளனர். எனவே இரண்டு காரணங்களினாலும் அவன் கொடுத்த தண்டனை அதிகம் என்று கூறமுடியாது என்பது காப்பியப் புலவர் வாதமாகும். எனவேதான் 'மிகையிலா வேந்தன் செய்கை' என்று பாடிச் செல்கிறார். - இனிப் பிள்ளையாரைப் பொறுத்தமட்டில் அவராவது கருணை காட்டி இருக்க வேண்டுமே என்ற வாதத்துக்கு விடை கூறுவார் போலக் கவிஞர், "புகலியில் வந்த ஞான புங்கவர் அதனைக்கேட்டும் ..., - ~, ... -- * - * * - * - - * - - * * - - * - * - - * - * - *