பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.42 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாதிருந்த வேலை " என்று பாடிச் செல்கிறார். ஞானபுங்கவர் என்று பிள்ளையாரை விளிப்பது கருத்துடை அடைமொழியாகும். ஞானம் நிறைந்த முனிவராக உள்ள ஒருவர் விருப்பு வெறுப்புக்கனைக் கடந்தவரா கலின் அரசன் நீதி செலுத்துவதில் தலையிடவில்லை என்ற கருத்தைப் பெற வைக்கின்றார். அடுத்து ‘இகல் இலர்' என்ற சொல்லால் அவருடைய மனத்தில் மாச்சர்யம் (Malice) கடுகளவும் இல்லை என்பதையும் பெற வைக்கின்றார். ஒருவர் தம்முடைய செல்வாக்கின் காரணமாக அரச நீதியில் தலையிடுவதை இன்று கண்கூடாகக் காணும் நமக்குச் சேக்கிழார் வாதத்தைப் புரிந்துகொள்வது கடினந்தான். மேலும் பிள்ளையார் இது பற்றிச் சிந்தித்தார். அவர்கள் செய்த குற்றம் அறிந்தே செய்த குற்ற மாகும். அறிந்தே செய்த, தீயிட்ட குற்றத்துக்கு அரசன் வழங்கிய நீதி மிகையில்லை என்று கருதினார் என்றுங் கூறுகிறார். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க வேறு எவ்வகையான ஆதாரமும் இல்லாத இந் நிகழ்ச்சியைச் சேக்கிழார் ஒரு வரலாற்றுக் காப்பியத்தில், பாடவேண்டிய இன்றியமையாமை யாது? என்ற வினாவுக்கு வேறு வகையிலே விடை இறுத்தல் கடினம். இரண்டாம் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு கூறுவதை யும், வைகுந்தப் பெருமாள் கோவிலில் துறவிகளைக் கழுவேற்றும் சிற்பம் காணப்படுவதையும் கொண்டு அந் நாளில் இக் கொடுமைகள் தமிழகத்திலும் நிகழ்ந்ததுண்டு என இராசமாணிக் கனார் கூறுகிறார்'. இந்த நிகழ்ச்சி முழுவதும் கற்பனையாகக் கூட இருக்கலாம்; செவிவழிச் செய்தியாக நாட்டில் வழங்கி வந்திருக்கலாம். இவை அனைத்திலும் ஆதாரமுள்ளது ஒரே ஒரு சய்திதான். சமணர்கள் அடியார்கள் வாழும் மடத்தில் தீ வைத்தனர் என்பதற்கு அகச் சான்றாகப் பிள்ளையார் பாடலே. உள்ளது. 'செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே! அஞ்சல் என்று அருள்செய் எனைப் பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே '’ என்ற இந்த ஒரு குறிப்புத் தவிர அனல்வாதம், புனல்வாதம். கழுவேற்றம் என்பவற்றிற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. இவற்றைப்பற்றிச் சேக்கிழார் பாட உதவிய மூலங்கள் நம்பி யாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியின் 33, 60