பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண மூலங்கள் 4 4 3 ஆகிய இரு பாடல்களில் வரும் குறிப்புக்களுடன், செவிவழிச் செய்திகள், கருநாடகத்திலுள்ள அபலூர்க் கோவில் புடைச் சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என்பவையேயாகும். நம்பியுங்கூடத் திருஞானசம்பந்தரைப் பற்றிய 33ஆவது பாடலில் ‘சமணர் வலி தொலைய' என்று மட்டுமே பாடியுள்ளார். நின்ற சீர் நெடுமாற நாயனார் பற்றிய 60 ஆவது பாடலில் தான், 'ஆர்த்த சமணர் அழிந்தது கண்டு மற்றாங் கவரைக் கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும் வார்த்தை அதுபண்டு நெல்வேலியில் வென்ற மாறனுக்கே என்று குறிப்பிடுகிறார். நம்பியும் இக்கருத்தைச் செவிவழிச் செய்தி என்றே கூறுகிறார். துதி வைத்த பஞ்சவன் என்றுரைக் கும் வார்த்தை அதுபண்டு என்ற சொற்களால் இது நீண்ட காலமாக உள்ள செவிவழிச் செய்தி என்றே கூறுகிறார். செவிவழிச் செய்தியாயினும் நம்பிகள் இதனை முழுவதும் ஏற்றுக் கொண்டு ஆங்காங்கே குறித்துச் செல்கிறார். ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில்,

  • f 3

'வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரை அன்று வான் கொடுத்த கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன்........... * 14 என்றும், மண்ணில் திகழ்சண்பைநாதனை, வாதினில் வல்அமனை பண்ணைக் கழுவின் துதிவைத்துஎம் பந்தவினை அறுக்கும் கண்ணை, கதியை, தமிழ் ஆகரனை...... ' என்றும் பாடுவது நோக்கற்குரியது. மேலும், 'உறியொடு பீலி ஒருகையிற் கொளும் பறிதலைச் சமனைப் பல்கழுமிசையே நீத்தது “ என்றும் பாடுகிறார். இதனை அடுத்து அவர் பாடிய 'ஆளுடைய பிள்ளையார் திருவுலா என்ற நூலிலும் கழுவேற்றிய கதையை, 'கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில் வாதில் அமணர் வலி தொலையக் காதலால் புண்கெழுவு செம்புனல் ஆறுஒடப் பொருதவரை வண்கழுவில் தைத்த மறையோனை.....'" என்று பாடுவதுடன் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் என்ற நூலிலும் இக்கருத்தை,