பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 பெரியபுராணம்- ஓர் ஆய்வு 'அறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த அமனான வன்குண்டர் கழுவேற முன்கண்ட செறிபாடல் வண்சண்பை நக்ராளி....... * 18 என்றும், ஆளுடை பிள்ளையார் திருத்தொகை என்ற பகுதியில், ‘பாழி அமனைக் கழுவேற்றினான்....... * † 9. என்றுங் கூறுவதால் நம்பியாண்டார் நம்பியைப் பொறுத்த மட்டில் இந்தச் செவிவழிச் செய்திக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதை அறியமுடிகிறது. ஆனால் அவர் கூற்றுக்களைக் கவனிக்கும்பொழுது சமணர் கழுவேறினர், சமணர் கழுவேற்றப் பட்டனர்; சம்பந்தரிடம் தோற்று ஏறினர்; சம்பந்தர் அவர்களை ஏற்றினார் என்ற முறையில் அமைந்துள்ளதைக் காணலாம். ஏறினர்; ஏற்றினார் என்ற இரண்டும் மலைபோன்று வேறு பாடுடைய சொற்கள். ஏறினர் என்றால் அவர்களாகவே ஏறினர் என்று பொருள் தரும். ஏற்றினர் என்றால் மன்னன் ஏற்றினான் என்று பொருள் தரும். இந்தப் பெரிய வேறுபாட்டை நம்பிகள் அறிந்ததாகத் தெரியவில்லை. இரண்டுக்கும் வேறுபாடு காணமால் ஒன்றாகவே பாவித்துப் பாடுகிறார். • இவருடைய பாடல்களை மட்டும் தமக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட சேக்கிழார் இந்த வேறுபாட்டை நன்கறிந்து 'ஏறினார்கள் என்றே பாடிச் செல்கிறார். பிள்ளையார் தங்கியிருந்த மடத்தில் சமயப் பகை காரணமாகச் சமணர் தீயிட்டனர் என்ற ஒரு செய்தியைத் தவிர வேறு எதற்கும். ஆதாரம் இல்லாத செய்திகளைக் கவிஞர் அற்றை நாளில் சைவருக்கும் சமணருக்கும் இடையில் கருநாடகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு தம் காப்பியத்தில் பாடினார் என்ற முடிவுக்கு வருவது தவிர வேறு வழியே இல்லை. சேக்கிழார் தாம் புராணம் இயற்ற அந்நாளில் கிடைத்த மூலங்களையும் அவர் அவற்றை எங்ங்னம் ஆய்ந்து எடுத்துப் பயன்படுத்தினார் என்பதையும் ஒருவாறு காண முடிகிறது. தில்லை எப்பொழுது சிறப்புப் பெற்றது இனி அடுத்துக் காணவேண்டிய சில செய்திகளும் உள. மூவர் முதலிகள் தேவாரம் பாடிய காலத்தில் தில்லைச் சிதம்பரம் வெகுவாகப் பலரும் அறிந்த நிலையை எய்திவிட்டது எனலாம். நடராசரைப்பற்றிச் சிறந்த ஆய்வு நூல் எழுதிய திரு. சிவராம மூர்த்தி இறைவனைத் தாண்டவ நாயகனாகக் கூறியுள்ள எல்லா மேற்கோள்களையும் தம்முடைய நடராஜா என்ற நூலின் முதல் அத்தியாயத்தில் எடுத்துக் காட்டுகிறார். சிவபுராணம்,