பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராண மூலங்கள் 4 4.7 தோன்றிய மணிவாசகரும் தில்லையையே பெரிதும் போற்றிப் பாடினர் என்பதாலும் சேக்கிழாரும் அவர்களை அடியொற்றிச் சென்றிருக்க வேண்டும். மேலும் அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த சோழ மன்னர்கள் அனைவரும் தில்லையிலேயே பெரிதும் ஈடுபாடு கொண்டு பலமுறை அக் கோயிலைப் பொன் வேய்ந்தமையின் காப்பியப் புலவரும் அக்கோயிலில் ஈடுபட்டுப் பாடியிருத்தல் வேண்டும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இவற்றை எல்லாம் கருத்திற்கொண் பார்க்கும் பொழுது தலைமை அமைச்சராகிய சேக்கிழார் ஏனைய காப்பியப் புலவர் களைப் போன்றவர் அல்லர் என்பதை எளிதில் அறிய முடிகிறது. ஏனையோர் மேற்கொண்ட காப்பியப் பொருள் போன்றதன்று தாம் மேற் கொண்ட காப்பியப் பொருள் என்பதை நன்கு உணர்ந் திருந்தார். வரலாற்று நாயகர்களின் வரலாற்றைக் காப்பியத்தில் வடிக்க முற்படுவது கூரிய வாள் முனையில் வெறுங்காலால் நடப்பது போன்றதாகும். ஒரு காப்பியத்தின் உயிர் நாடியான கற்பனை விரிந்து செல்ல அக் காப்பியத்துள் எவ்விதத் தடையும் இருத்தல் கூடாது. ஆனால், வரலாற்றுக் காப்பியம் பாட வருபவர் கற்பனைக்கு அதிக இடந்தந்துவிட்டால் வரலாற்றுத் தன்மை அடிபட்டுப் போகும். இவை இரண்டும் நிகழ்ந்து விடாமல் காப்பிய உறுப்பாகிய கற்பனைக்கும் இடந்தந்து வரலாற்றுச் சிறப்பு அடிபடாமலும் பாடிய சிறப்பு இவர் ஒருவருக்கே உண்டு. தொண்டு என்ற பண்பைக் காப்பியப் பொருளாகப் படைத்ததும் புதுமை: கற்பனை, வரலாறு என்ப வற்றை அளவறிந்து புகுத்தியது, இரண்டாவது புதுமை. வான்மீகரின் கதையில் தன் கருத்தை ஏற்றிக் கூறுவதற்கு வேண்டு மான மாற்றம் செய்து கம்பநாடன் பயன்படுத்திக் கொண்டது போலவே, சேக்கிழாரும் தமக்கு முன்னர்ப் பெரியபுராணத்தில் வரும் அடியார்கள் வரலாறுகளைப் பேசுகிற மூலங்களை நன்கு ஆய்ந்து புதிய முறையில் காப்பியத்தை அமைத்தார். முன்னர் இருந்த மூலங்கள் எதுவும் நம்பியின் அந்தாதி உள்பட, தொண்டின் சிறப்பைக் கூறவில்லை. சிவனடியார்களின் பக்திச் சிறப்பை மட்டும் வெளியிட அவை உதவின. ஆனால் சேக்கிழார் அதே மூலங்களை எடுத்துக் கொண்டு தொண்டின் பெருமையைக் கூற முனைந்தார். தம் கருத்து அதுவே என்பதைக் குறிப்பாகத் திருக்கூட்டச் சிறப்பில், 'அன்பினால் மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார் கைத்திருத் தொண்டு செய் கடப்பாட்டினார் இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார்