பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.48 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்று கூறுகையில் வெளிப்படுத்தி விடுகிறார். இந்தத் தொடரைக் கூர்ந்து நோக்கினால் 'இத்தகைய கைத் தொண்டு செய்யும் அன்பு நிரம்பியவர்கள் இங்குக் கூறப் பெற்ற அடியார் கள் மட்டுமல்லாமல் இங்குக் குறிக்கப்படாத பலரும் உளர்' என்ற பொருள் தந்து நிற்றல் நன்கு அறியப்படும். எனவே தொண்டையே பெரிதாக மதித்துச் சமுதாயத்தில் உள்ளவர்கள் அன்புடன் தொண்டு செய்தலை மேற்கொள்ளுதலே மானுடப் பிறப்பின் உண்மைப் பயனாகும் என்பதை வலியுறுத்தவே பெரியபுராணம் என்ற காப்பியம் தோன்றியது. நாயன்மார்கள் அனைவரும் ஒவ்வொரு வகையான தொண்டைச் செய்தனர் என்பதை அறிய முடிகிறது. தொண்டு செய்வதனால் தம்முடைய ஆணவம் வளர்ந்துவிடாமல் இருக்க இத் தொண்டை இறையன் யுடன் சார்த்தியே அவர்கள் செய்தனர். மக்கட்குச் செய்யும் தொண்டை மகேசனுக்குச் செய்யும் தொண்டாகவே கருதினர். இவ்வாறு அழுத்தமான ஒரு நினைவு மனத்துள் தோன்றி விட்டால் தொண்டு செய்பவர் உயர்வு மனப்பான்மையையும் தொண்டை ஏற்றுக் கொள்பவர் தாழ்வு மனப்பான்மையையும் அடையத் தேவை இல்லை. இதன் மேலும் இந்த அடியார்கள், நாயன்மார்கள் ஒருபடிமேலே சென்றுள்ளனர். தாமே விரும்பி ஏற்றுக் கொண்ட இந்த மக்கள் தொண்டை, தொண்டு செய்தல் கடமை என்று கருதிவிடாமல். இதனைத் தத்தம் வாழ்நாளில் ஒரு குறிக்கோளாகவே கொண்டனர்! அவ்வாறு கொள்ளாத போது இத் தொண்டை இயன்றபோது செய்து இயலாதபோது விட்டு விடலாம். இவ்வாறு செய்தால் யாரும் அதில் குறை காண மாட்டார்கள் என்றாலும் இவ்வாறு செய்வது சாதாரண மக்கள் செய்யும் செயலாகும். ஆனால் இதனையே குறிக்கோளாகக் கொண்டு அந்தக் குறிக்கோளுக்கு (செய்யும் தொண்டுக்கு) என்றாவது நீக்க முடியாத இடையூறு வந்தால் உயிரையே விடுவது என்பதுதான் அடியார்கள் வாழ்வின் உயிர் நாடியான செய்தியாகும். இதனைக் கண்டறிந்து விளக்கமாகக் கூறியவர் சேக்கிழார்.

  • -ufray losoljusrsircoud (Superiority Complex) 3,606vá, காட்டாத தொண்டு, பக்தியின் அடிப்படையில் எழுந்த தொண்டாகவே இருத்தல் முடியும். அத்தகைய இறையன்பு கலந்த தொண்டு செய்தலைக் குறிக்கோளாகக் கொண்டவர்களே இந்த நாயன்மார்கள். எனவே இவர்கள் தொண்டின் ஆணி வேராக இருந்த இந்த இறையன்பு (பக்தி) எத்தகையது என்ப்தை அடுத்துக் காணலாம்.