பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) மனிதனிடம் உள்ள இயல்புகள் மூன்று மனிதனின் ஆளுமை என்பது மூன்று முக்கியமான இயல்புகளின் குட்டுச் செயலாகும். அறிவு (Knowledge), மன உணர்ச்சி (Feeling), மனத்திட்பம் (Will) என்பவையே அம்மூன்று இயல்பு களாகும். இந்த மூன்றின் கூட்டமே மனிதனிடம் காணப்படும் ஆளுமையை (Personality) நிர்ணயிக்க உதவுகின்றன. எல்லா மனிதர்களிடமும் இம் மூன்றும் ஒரே அளவில் இருக்கும் என்று கூறமுடியாது. ஒரு சிலரிடம் அறிவு மிகுதியாக இருப்பின் அவர் கள் சிந்தனையாளர்களாகப் பரிணமிக்கின்றனர். ஒரு சிலரிடம் மன உணர்ச்சி மிகுதியாகக் காணப்படலாம். இவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாய் இருப்பர். மூன்றாவது வகையினர் மனத்திட்பம் அதிகம் கொண்டவராய் இருப்பர். அறிவு வழிச் செல்பவர்-உணர்வு வழிச் செல்பவர் உலகிடை வாழும் சாதாரண மக்களைப் பொறுத்த மட்டிலும்தான் இப் பிரிவினை எனக் கருதவேண்டா. ஆன்மிக வழியில் செல்பவர்களையும் இப் பிரிவுகளுள் அடக்கிவிடலாம். அறிவுத் துறையில் ஆழ்ந்து செல்பவர்கள் தத்துவ வாதிகளாக ஆகின்றனர். முழுப் பொருளை அறிவின் துணை கொண்டுதான் அறியமுடியும் என இவர்கள் நம்புகின்றனர். காரண காரியத் தொடர்புடன் அறிவின் துணை கொண்டு ஆய்ந்தே மூலப் பொருளை அறியமுடியும் என இவர்கள் நம்புவது மட்டுமல்லாமல் அறுதியிட்டுக் கூறவும் செய்கின்றனர். மன உணர்ச்சி மிகுந்தவர் கள் எல்லையற்ற பக்தியால் அல்லது இறைப் பொருளுக்குத் தன்னை உணர்ச்சி பூர்வமாக அர்ப்பணிப்பதால் மட்டுமே உணர முடியும் எனக் கூறுகின்றனர். மூன்றாவது வகையினர் கிரியைகள் எனப்படும் செயல் முறைகளாலும் பட்டினி, தலதரிசனம், கிரியை செய்பவர்களைத் திருப்திப்படுத்தல் ஆகியவற்றின் மூலமே இறைப் பொருளை அடைய முடியும் எனக் கருதுகின்றனர். முதல் வகையினர்க்கு எடுத்துக் காட்டாகச் சங்கரர், இராமனுஜர்,