பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 45 I மாத்வர், மெய்கண்டார், உமாபதிசிவம் என்பவர்களைக் கூறலாம். இரண்டாவது வகையினர்க்கு உதாரணமாக இந் நாட்டைப் பொறுத்தவரை நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் என்பவர்களைக் கூறலாம். மூன்றாவது வகைக்கு உதாரணமாக அக்னிகாரியம் செய்யும் வைதிகர்கள், தாருகா வனத்து முனிவர் ஆகியோரைக் கூறலாம். இப் பிரிவினை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டது அன்று இவ்வாறு பிரித்துக் கூறுவதால் இம் மூன்று வகையினரும் ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளாத முரண்பாடுடையவர்கள் என்று கருதிவிடக்கூடாது. ஆதி சங்கரர் பிரமத்தைப்பற்றி அறிவு வாதம் செய்துவிட்டுப் பஜகோவிந்தம், செளந்தர்யலஹரி என்பவற்றைப் பாடியுள்ளார். நம்மாழ்வார் திருவாய்மொழியில், 'வாயுந்திரைபுகளும் கானல்மட நாராய் ! என்று உணர்ச்சி பொங்க அகத்துறைப் பாடல் பாடிவிட்டு, உயர்வற உயர் நலம் உடையவன்' என்றும் 'உளன் எனில் உளன் அவன் ’ என்றும் தத்துவம் பேசுகிறார். திருஞானசம்பந்தர் தாம் முத்தீ வளர்ப்பவர் என்றும், வேள்வி 燃 என்றும், பின்வரும் அடிகளில் கூறுகிறார். o 年 每辑 *领 多资孩数兹珍多幽会萨s 始 ●曾※ 泰夺哆 பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய கழுமலமே பதியாக் கொண்டு தழங்கெரி மூன்றோம்பும் தொழில் ஞான சம்பந்தன் சமைத்தபாடல் 'சென்னிமிசைக் கொண்டொழுகு சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலுநாவன் ' எனவே இங்குக் கூறப் பெற்ற வகைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இணையமுடியாத வகைகள் அல்ல. இவர்கள் ஒரு