பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

会 5 認 பெரியபுராணம்- ஓர் ஆய்வு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லுதலும் மீண்டும் தம் பழைய கொள்கைக்கே திரும்புதலும் சாதாரணமாக நடை பெறுவனவாகும். பெரும்பாலும் தாங்கள் முதலிற்கொண்ட கொள்கையிலேயே நிலைத்து நிற்க இவர்கள் அறிவு ஒரளவு உதவுகிறது. இப் பிரிவினையில் அடங்குபவர்கள் பலரும் தாம் கொண்ட கொள்கையே சரி என்று நம்பி வாதிடும் இயல்புடையவர்கள். இதிலும் ஒரு வியப்பு என்னவென்றால் அறிவுவாதிகளுள்ளும் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உண்டு. இத் துறையில் தலைநின்ற சங்கரரை, இராமனுசர் ஏற்கமாட்டார். இருவரும் ஒரே நூலை ஒரே சூத்திர்த்தை, ஒரே சொல்லை எடுத்துக் கொண்டு தங்கள் கொள்கைக்கு ஏற்றபடி அவற்றிற்குப் பொருள் கூறித் தத்தம் மதங் களே அமைவதாக வாதிடுவர். இவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரம்ம சூத்திரமும், உபநிடதங்களும், கீதையும் சூத்திர வடிவில் இருப்பதால் அவற்றை எப்படி வேண்டுமானாலும் விரித்துப் பொருள்கூற வாய்ப்பளிக்கின்றன. உணர்ச்சி உலகில் ஈடுபட்டவர் களிடை இத்தகைய வேறுபாடு இராதல்லவா? என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஆழ்வார்களும், நாயன்மார்களும், கடவுட் பொருளையும் அதன் இயல்புகளையும் அதனிடம் சரணடைந்து பக்தி செய்யவேண்டிய இன்றியமையாமையையும் பேசுவதில் வேறுபடுவதில்லை. ஆனால் இத்தகைய பரம் பொருளுக்குப் பெயர் சூட்டுவதிலும் எங்கணும் நிறைந்த அப் பரம்பொருள் எந்த இடத்தில் நிரந்தரமாகத் தங்கியுள்ளது என்று கூறுவதிலுமே பெருத்த மாறுபாடும், போராட்டமும் நிகழ்கின்றன. கிரியை களை நம்பும் வைதிகர்களிடையேயும் இத்தகைய மாறுபாடு கட்குப் பஞ்சம் இல்லை. அறிவு வாதம் செய்பவர்களிடம் நியாயம் இல்லாமல் இல்லை. மனிதர்களாக நம்மைப் படைக்கும் பொழுதே . ன் ஒரளவு அறிவுடன்தான் படைக்கிறான். எனவே அந்த அறிவின் துணையை நாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. அறிவின் துணையை நாடாத பக்தி, மூடபக்தியாய் (Fanaticism) வெறியாய், கொடுமை நிறைந்த செயல்களிலும் பிறருக்குத் தீங்கிழைக்கும் நிலையிலும் ஒருவனைக் கொண்டு செலுத்திவிடும். அறிவின் துணை கொண்டு ஆராய முற்படாத பக்தியால் சமயப் போராட்டங்களும் ஒரே சமயத்துள் உட்போராட்டங்களும் நிகழ்கின்றன. சமயத்தின் பெயரால் ஆயிரக்கணக்கானவர் களைக் கொன்று குவிக்கும் கொடுமை இன்றும் நிகழக் காண்கிறோம் இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடை