பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட இறையன்பு (பக்தி) 453 பெற்று வந்ததுடன் இன்றும், இந்த அணுயுகத்தினும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமயத்தின்மேல் கொண்டபக்தியன்று இது. மனிதனின் அகங்கார வெறி, சமயப் போர்வையைப் போர்த்துக் கொள்வதால் சமயம் என்ற பெயரில் இக் கொடுமை களை இன்றும் நிகழ்த்துகின்றது. சமய வாழ்வுக்கும் அறிவு வழி தேவைதான் சமய வாழ்வில் ஒரளவு அறிவின் துணை கொள்ளவேண்டும் என்று கூறுகிறோமே யொழிய எந்த அளவுக்கு இது தேவை என்பதில் கருத்து வேறுபாடு நிரம்ப உண்டு. பக்திக்கு உள்ள உறுதிப்பாடு அறிவில் இருப்பதில்லை. எவ்வளவுதான் அறிவின் துணைகொண்டு மூலமுதற் பொருளின் இயல்புகளை ஆய்ந்து கூறினாலும், அதுவே மிகவும் சரி என்று அறிவுக்குப் பட்டாலும், அந்த மூலப் பொருளிடத்து உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு ஏற்பட முடியாது. அறிவு, ஈடுபாட்டை ஏற்படுத்தாது; உணர்வு மூலம் ஏற்படுகின்ற பக்தியில் விளைகின்ற இன்பத்தை அறிவுவாதம் தர முடியாது. ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் படிக்கும் பொழுது அவர்கள் பெற்ற இன்பத்தை, அனுபவத்தை நாமும் ஒரளவு பெற முடிகின்றது. ஒரு மனிதன் பெற்ற உணர்ச்சியை மற்றொரு மனிதனுக்குத் தரமுடியும். ஆனால் தருக்க வாதத்தால் உண்மையை உணர்த்த முடியும் என்று ஒரு பேச்சுக்காக வைத்துக் கொண்டாலும்கூட, அதனைப் பிறருடைய அறிவுக்கு விருந்தாக அறிவிக்கலாமே தவிர. உணர்வுக்கு விருந்தாகப் படைக்க முடியாது. மெய்ப் பொருளை அடைகின்ற வழி இதுதான் என்று அறிவு சுட்டிக் காட்டினாலும் அதில் சென்று பயனடைவதென்பது யாவர்க்கும் எளிய தொன்றன்று! இராவணன் போன்றவர்கள் 'ஆயிர மறைப் பொருள் உணர்ந்து அறிவு அமைந்தவர்கள் தாம். என்றாலும் என்ன? 'தீயினை நயப்புறுதல் செய்த வினையைத் தான் செய்தனர்' எனவே அறிவு வாதமும், உணர்ச்சியற்ற தருக்க வாதமும் மனிதனை நன்னெறியில் உறுதியாகச் செலுத்தும் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றன்று. எந்த அளவுக்கு இது தேவை என்பதில் கருத்து வேறுபாடு உண்டு இதன் எதிராக உணர்ச்சி வழி மனிதன் விரும்பிய வழியில் செல்வதற்கு வேண்டிய மன உறுதியையும் நெஞ்சு உரத்தையும் தருகிறது. உணர்ச்சியில் மூழ்கிய ஒரு தாய், தன் அன்பின் காரணமாகத் தன் சக்திக்கு அப்பாற்பட்ட செயல்களையும் மேற்