பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.54 பெரியபுராணம் - ஓர் ஆய்வு கொள்ள முடிகிறது. இதனை அடுத்துள்ள கிரியா மார்க்கம் எவ்விதப் பயனையும் தராமல், சாதகனைப் புறப்பட்ட இடத் திலேயே இருக்குமாறு செய்து விடுகிறது. இந்த கிரியைகள் அனைத்தும் ஒருவன் தான் வாழ வேண்டும் என்ற கருத்தாலேயே செய்யப் பெறுகின்றன. எனவே கார்மிகன் தன்னலம் என்ற கட்டுக்குள்ளிருந்து விடுபட்டுப் பிறர் பொருட்டாக எதனையும் செய்யும் நிலையை அடைவதில்லை. சாதாரண மனிதன் ஒரு சில பழக்க வழக்கங்களைப் பெறுவதற்குக் கிரியைகள் ஒர் அளவு உதவு கின்றன. ஆனால் இறுதிவரையில் கிரியைகளிலேயே வாழ்பவன் எவ்வித வளர்ச்சியையும் பெறாதவனாகிறான். முதல், இரண்டாம் வகுப்புக்களில் கணிதம் கற்கத் தேவைப்படும் வாய்பாடுகள் பட்ட மேற்படிப்பிலும் தொடர்ந்தால் என்ன ஆகும்? அங்கும் வாய்பாடு வேண்டும் என்பவனுடைய வளர்ச்சியை என்னென்பது? அறிவு, உணர்ச்சி, மனத்திட்பம் என்ற மூன்றும் தம்முள் அளவொத்து அமைவதே சிறப்புடையது மூன்று பிரிவுகளின் குறைவு நிறைவுகளை ஒரளவு கண்டபின்னர் ஒரு முடிவு எளிதில் வரமுடியும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே இருப்பின் முழுப் பயனைத் தராமல் ஒழிந்துவிடுதல் உறுதி. எனவே இவை மூன்று வழிகளும் தம்முள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேரும் பொழுது சிறந்த பயன் விளைகிறது. மூன்றையும் கலந்து ஒர் ஒருமைப்பட்ட நிலையை அடைய வேண்டுமாயின் அது முதல் மூன்றாவது வழிகளில் செல்பவர்கள் பெறமுடியாத ஒன்றாகிவிடும். முதல் வழியில் அறிவு விரிந்து செல்லச் செல்ல 'நான் உண்மையைக் காண முயல் கிறேன்; ஒரளவு இப்பாதையில் முன்னேறி வருகிறேன்; உண்மை யைக் காண என்னால் முடிகிறது' என்ற அகங்கார வளர்ச்சி ஏற்படுவதைத் தடை செய்ய முடியாது. எனவேதான் இராமானுஜர் ஞானம் விளைந்து பக்தியாக முதிர்வதைப் பெரிதாகப் பாராட்டினார். முதிர்ந்த பக்தியில் பரஞானம் இருக்கத்தான் செய்கிறது. பரஞானம் இருப்பதால் ஆலய வழிபாடு முதலியவற்றை இது தடை செய்வதில்லை. மேலும் மக்களுள் பெரும்பாலோர் தம்முடைய உணர்ச்சிகட்கு அடிமை யாய் இருத்தலின் பக்திமார்க்கத்தை அவர்கள் ஒரளவு எளிதாகக் கடைப்பிடிக்க முடியும். எந்த உணர்ச்சிக்கு அவர்கள் ஆட்பட்டுள் னார்களோ அந்த உணர்ச்சியின் பற்றுக்கோட்டை மாற்றி அமைப்பதன் மூலம் உணர்ச்சிப் பிண்டமாக உள்ள ஒருவன் பெரும் பக்தனாக மாறிவிட வாய்ப்புக்கள் மிகுதியாக உண்டு. இதனையே 'மடை மாற்றம் (TRANSFORMATION) என்று கூறுவர்.